முந்தைய நிதியாண்டில் நம் நாடு 746 டன் தங்கம் இறக்குதி செய்து இருந்தது. இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. வரி குறைக்கப்பட்டதால் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இறக்குமதி அதிகரிக்கவில்லை. இந்த நிதியாண்டில் கடந்த நவம்பர் வரை நம் நாடு 664 டன் அளவுக்கே தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. எனவே இது மேலும் வரி குறைப்புக்கான தேவையை வலுப்படுத்துகிறது. எதிர்வரும் பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி மீதான வரியை 6 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக மத்திய அரசு குறைக்கும் என நகை துறை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

ஏனெனில் வரி குறைப்பு இத்துறையின் நிதி ஆரோக்கியத்திற்கு ஊக்கமளிக்கும். இந்திய தங்கம், வெள்ளி மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், தங்க இறக்குதி வரியை குறைக்கவும், சர்வதேச புல்லியன் எக்ஸ்சேஞ்ச் (ஐஐபிஎக்ஸ்) வாயிலாக அனைத்து தங்க இறக்குமதிகளையும் அனுமதிப்பதற்கும் எங்கள் அமைப்பு நீண்டகாலமாக முயற்சியை எடுத்து வருகிறது. மேலும், ஐஐபிஎக்ஸ் மூலம் அனைத்து தங்க இறக்குமதிகளையும் ஒழுங்கப்படுத்த வேண்டும். இதனால் தங்கத்தை ஏற்றுமதி செய்வதற்கும், தங்கத்தை இறக்குமதி செய்வதிலும் வங்கியாளர்களின் பங்கினை குறைப்பதற்கு உதவும் என தெரிவித்தார்.
காயின்ஸ்விட்ச் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் கூறுகையில், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் வரி விதிக்கப்படுவது மற்றும் இழப்புகளை ஈடுசெய்ய இயலாமை அதாவது எந்த இழப்புகளையும் காரணியாக்காமல் தங்கள் முழு லாபத்திற்கும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும். கூடுதலாக ஒவ்வொரு கிரிப்டோ பரிவர்த்தனையிலம் 1 சதவீதம் டிடிஎஸ் செய்யப்படுவது முதலீட்டாளர்களின் மூலதனத்தை குறைத்து வர்த்தகத்தை கட்டுப்படுத்துகிறது. இவை கிரிப்டோகரன்சி துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்களும் கிரிப்டோ சுற்றுச்சூழல் அமைப்பில் செழித்த வளர ஒரு சமமாள தளம் அவசியம் என்று தெரிவித்தார். எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில், கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தெளிவான கட்டமைப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என இத்துறை எதிர்பார்க்கிறது.
story written by: subramanian
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications