தங்கம், வெள்ளி விலை ரீடைல் சந்தையில் நிர்ணயம் செய்வதில் சர்வதேச ஸ்பாட் சந்தை விலையும், பியூச்சர்ஸ் சந்தை விலையும் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எம்சிஎஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் தங்கம், வெள்ளி பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து சரிவு பாதையில் உள்ளது, இதற்கிடையில் இன்று மீண்டும் மோசமான வர்த்தக நாளாகவே அமைந்துள்ளது.
டிசம்பர் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கத்திற்கான விலை இன்று 0.4 சதவீதம் வரையில் சரிந்து 1,29,344 ரூபாயாக உள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் பார்க்கும் போது இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 257 ரூபாய் குறைந்து 13,069 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 1,80,000 ரூபாயாக உள்ளது. தங்கம் - வெள்ளி விலை 2026ஆம் ஆண்டு துவக்கத்தில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வந்த வேளையில், ஈரான் போரும், ஏஐ தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியும் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையைத் திருப்பிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை.
குறிப்பாக அமெரிக்கப் பத்திர முதலீட்டின் மீதான வட்டி வருமானம் அதிகரித்த பின்பு தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் வேகமாக குறைந்து மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் உலகளவில் தங்கம்,வெள்ளி விலை குறைந்து தற்போது பயமுறுத்தும் முதலீடாக பார்க்கப்படுகிறது.\
இந்த நிலையில் நவம்பர் மாதம் தங்கம், வெள்ளி விலை சரிவதற்கு 2 மிக முக்கியமான காரணம் உள்ளது. ஓன்று வலிமையான டாலர் மதிப்பு, மற்றொன்று அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் பெடரல் ரிசர்வ் தனது டிசம்பர் கூட்டத்தில் மீண்டும் பென்ச்மார்க் வட்டியை உயர்த்த முடிவு செய்திருப்பது தான்.
அமெரிக்கா மீண்டும் வட்டியை உயர்த்தினால் அந்நாட்டு அரசு பத்திரங்கள் மீதான முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும், இதனால் டாலர் மதிப்பு அதிகரிக்கும், டாலர் இன்டெக்ஸ் தற்போது 103.4 ஆக உள்ளது இது ஏப்ரல் 2025க்கு பதிவான அதிகப்படியான அளவாகும்.
இவை இரண்டுமே தங்கம் - வெள்ளி விலை உயர்வுக்கு எதிரானது என்பதால் விலை குறைவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக உள்ளது.
இதேவேளையில் தற்போது சர்வதேச ஸ்பாட் சந்தையைப் பார்க்கும் போது தங்கம் விலை 0.35 சதவீதம் அதிகரித்துக் காணப்படுகிறது, இதை வெறும் தடுமாற்றமாகப் பார்க்க முடியாது.
காரணம் அமெரிக்க பெடர்ல் ரிசர்வ் அக்டோபர் 27-28ஆம் தேதிகளில் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி உயர்வு அவசியம் என அனைவரும் ஒப்புக்கொண்டாலும், நாணய கொள்கையைக் கடினமாக்க வேண்டும் என்பதை ஒருமித்த கருத்தாகப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பெட் கவர்னர் மைக்கேல் பார், கிறிஸ்டோபர் வாலர் ஆகியோர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்பதை ஆணித்தரமாகக் கூறியுள்ளனர். இதேபோல் வட்டி விகிதம் அடுத்த சில காலத்திற்கு இதே நிலையில் வைத்திருக்கும் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
ஆனால் சந்தை கணிப்புகள் டிசம்பர் கூட்டத்தில் வட்டி விகிதம் 0.25 சதவீதம் அதிகரிக்க 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக பிஎல் கேபிடல் நிறுவனத்தின் கமாடிட்டி பிரிவின் தலைவர் ஆஷிஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் பெடரல் ரிசர்வ்-ன் அக்டோபர் கூட்டத்தின் முடிவுகள் தங்கம் விலையில் இன்று சிறிய உயர்வை ஏற்படுத்தியிருந்தாலும், இது தாக்குப்பிடிக்குமா என்பது அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications

