நடப்பு ஆண்டில் தங்கம் விலையில் பெரியளவிலான ஏற்ற இறக்கம் என்பது இருந்து வருகின்றது. இந்த போக்கு அடுத்த ஆண்டில் எப்படியிருக்கும். தங்கம் மற்றும் வெள்ளி விலையானது எப்படியிருக்கும். நிபுனர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்கக்லாம்.
தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் 1935 - 1630 டாலர்களுக்கு இடையில் காணப்பட்டது. இதே வெள்ளியில் 25 டாலர் உச்சத்தினையும், 18 டாலர் குறைந்தபட்ச விலையாகவும் இருந்தது.
மொத்தத்தில் நடப்பு ஆண்டில் முறையே -2% மற்றும் 2% வருவாயினை இந்த விலையுயர்ந்த மெட்டல்கள் கொடுத்துள்ளன.
பிற்பாதியில் அதிகரிக்கலாம்
2023ம் ஆண்டின் முதல் பாதியில் இந்த மந்த நிலையே தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023ன் பிற்பாதியில் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கலாம். இது வலுவான வருமானத்தை கொடுக்கலாம். இதனால் நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால, இரண்டாம் பாதியில் முதலீட்டாளர்கள் வருமானம் பார்க்க தொடங்கலாம்.
டாலர்: ரூபாய் அடிப்படை
டாலர் அடிப்படையில் நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது இந்த காலாண்டர் ஆண்டில் 0.5 - 1% லாபம் கொடுத்துள்ளது. இதே ரூபாய் அடிப்படையில் 11% லாபம் கொடுத்துள்ளது. வட்டியில்லா முதலீடாக இருந்தாலும், நடப்பு ஆண்டில் நிலவி வரும் பல்வேறு அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் இது பாதுகாப்பாக அமைந்துள்ளது.
எதிர்பார்ப்பு
தொடர்ந்து பணவீக்கத்தினை குறைக்க பெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வந்தது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது.
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் தங்கம் விலையானது சைடுவேயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இரண்டாம் பாதியில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய லெவல்கள்
தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் சர்வதேச சந்தையில் 1900 - 1975 டாலர்கள் என்ற லெவலில் காணப்படலாம் என்றும், இதே இந்திய சந்தையில் ரூபாய் அடிப்படையில் 10 கிராமுக்கு 55000 - 57000 ரூபாய் என்ற லெவலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிரது.
2022ல் தாக்கத்தினை ஏற்படுத்திய காரணிகள்
2022ம் ஆண்டில் தங்கத்தினை டாலர் மதிப்பு, பத்திர சந்தை, மத்திய வங்கிகளின் நடவடிக்கை. பணவீக்கம் மற்றும் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், கொரோனா அச்சம் என பலவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தின. இதற்கிடையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச பொருளாதாரமும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023-ன் போக்கு
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் விலையானது நேர்மறையாக இருக்கும் என்று நம்பிய முதலீட்டாளர்கள், 2023ம் ஆண்டில் மெதுவான பொருளாதார வளர்ச்சி, ரெசசன் அச்சம், மத்திய வங்கிகளின் நடவடிக்கை என பலவும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களாக உள்ளன. குறிப்பாக டாலர் மதிப்பு & பத்திர சந்தையினை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்கலாம்.
எதிர்பார்ப்பு
2022ன் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தினை விட, வெள்ளியானது நல்லதொரு லாபத்தினை கொடுத்துள்ளது எனலாம். இது எதிர்காலத்திலும் இந்த போக்கே தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் 58000 ரூபாயினை தொடலாம் என்றும், இதே வெள்ளி விலையானது, 73,000 ரூபாயினையும், அதனை தொடர்ந்து 82,000 ரூபாயினையும் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications