கடந்த ஒரு வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. தங்கம் சுமார் 7% வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளி இன்னும் கடுமையாக சரிந்து 32% வரை இழப்பை சந்தித்துள்ளது. இந்த திடீர் வீழ்ச்சி முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் திங்கள்கிழமை இரண்டு உலோகங்களும் சிறிய அளவில் மீண்டு உள்ளது.
இதனால் தங்கம் விலையில் மீண்டும் சரிவு ஏற்படுமா அல்லது தற்போதைய சரிவை பயன்படுத்தி முதலீடு செய்ய வேண்டுமான என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதற்கான பதிலை முதலீட்டு சந்தை நிபுணர்கள் புட்டு புட்டு வைத்துள்ளனர்.

தங்கம் விலை
ஸ்பாட் தங்க விலை திங்களன்று 1.4% உயர்ந்து ஒரு டிராய் அவுன்ஸுக்கு சுமார் 5,030 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 1.33 சதவீதம் உயர்ந்து 1,57,525 ரூபாயாக உள்ளது. சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 25,100 ரூபாய் உயர்ந்து 1,59,820 ரூபாயாக உள்ளது. இன்றைய உயர்வுக்கு வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தையில் பதிவான உயர்வு முக்கிய காரணமாக அமைந்தது.
வெள்ளி விலை
வெள்ளி ஸ்பாட் விலை 4.3% உயர்ந்து 81.36 டாலர் விலை ஒரு டிராய் அவுன்ஸ் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 4.6 சதவீதம் உயர்ந்து 2,60,025 ரூபாயாக உள்ளது. சென்னை ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 15,00 ரூபாய் உயர்ந்து 300000 ரூபாயாக உள்ளது.
இன்று தங்கம், வெள்ளி விலையில் அதிகப்படியான தடுமாற்றங்கள் இருந்தது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விலை சரியும்போது முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
கடந்த ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி சாதனை அளவை எட்டியது உண்மைதான். ஆனால் இந்த பயணம் ஒருபோதும் சீராக இருந்ததில்லை. விலை ஏற்ற இறக்கம் (volatility) இயல்பானது என்றாலும் குறுகிய கால ஏற்ற இறக்கத்தை பார்த்து பீதி அடைய வேண்டாம் என்று அவர் அறிவுறுத்துகிறார் தி கோல்ட் புல்லியன் கம்பெனியின் மேலாண்மை இயக்குநர் ரிக் காண்டா.
மேலும் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய தவறு "சரியான நேரத்தில் வாங்க வேண்டும்" என்று நினைப்பது. தங்கம் மற்றும் வெள்ளி முதலீடு செய்யும் தினசரி விலை மாற்றத்தை புறக்கணித்து முதலீடு செய்ய வேண்டும். உங்கள் வருமானம், சேமிப்பு மற்றும் நீண்டகால நிதி இலக்குகளை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறார்.
தங்கம் மற்றும் வெள்ளி முதலீடு விலை உயர்வு அல்லது சரிவைப் பொறுத்தது அல்ல. அது உங்கள் நிதி நிலைமை மற்றும் நீண்டகால இலக்குகளைப் பொறுத்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும். மேலும் இவற்றை விரைவான லாபத்திற்கான குறுக்கு வழி இல்லை என்றதை முதலில் புரிந்துக்கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
வெள்ளி ஏன் தங்கத்தை விட ஆபத்தானது?
சிட்டி இன்டெக்ஸ் மற்றும் FOREX.com நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் ஃபவாட் ரசாக்சாடா கூறுகையில், வெள்ளி தங்கத்தை விட ஆபத்தான சொத்து (risk asset) போல நடந்துகொள்கிறது. பொருளாதாரத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்போது வெள்ளி வேகமாக உயரும். ஆனால் சந்தை பலவீனமடையும்போது வெள்ளி விலை மிக வேகமாக சரியும். தங்கம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சொத்தாக கருதப்படுகிறது என முதலீட்டாளர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார்.
தங்கம் ஏன் இன்னும் தேவைப்படுகிறது?
XS.com நிறுவனத்தின் மூத்த சந்தை ஆய்வாளர் Rania Gule கூறுகையில், தங்கம் மீண்டும் தனது பாரம்பரிய நிலைக்கு திரும்பி வருகிறது,அதாவது பாதுகாப்பான மற்றும் நடுநிலை சொத்தாக (safe haven) மாறி வருகிறது என தெரிவித்தார். அமெரிக்க டாலரில் நம்பிக்கை குறைவதால், உலக அளவில் தங்கத்தை பாதுகாப்பான சேமிப்பாக மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்று விளக்கினார்.
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications