தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று உள்நாட்டிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளன. இந்தியாவில், MCX சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைநிலவரத்தை பார்க்கும் போது அக்டோபர் 21 காலை வர்த்தகத்திலே சர்வதேச சந்தையின் தாக்கம் காரணமாக வரலாற்று உச்சத்தை தொட்டது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுக்கு புவிசார் அரசியல் பதற்றம், பொருளாதார நிச்சயமின்மை மற்றும் மத்திய வங்கி கொள்கைகள் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக உள்ளது.

சர்வதேச சந்தையில், தங்க விலை ஒரு அவுன்ஸ்-க்கு 2,700 டாலரைக் கடந்துள்ளது, வெள்ளி 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமின்மை ஆகியவை முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான சொத்துக்கள் மீது அதிகம் முதலீடு செய்யத் தூண்டியுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் பெரிய அளவிலான வட்டி விகிதங்களைக் குறைக்கும் சாத்தியக்கூறு மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தரவுகளின் எதிர்பார்ப்பு ஆகியவை அமெரிக்க டாலர் மதிப்பைப் பலவீனப்படுத்தியுள்ளது.
இதேவேளையில் ஐரோப்பிய மத்திய வங்கியும் கடந்த வாரம் தனது நாணய கொள்கை கூட்டங்களில் வட்டி விகிதங்களைக் குறைத்த பிறகு சந்தையில் அதிகப்படியான பணப்புழக்கம் உருவாக்கி தங்கம் இதில் பெரும் பகுதி முதலீட்டை ஈர்த்துள்ளது.
மேலும் அடுத்த சில நாட்களுக்குத் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்த நிலையிலேயே இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்து சந்தையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களைக் கவனித்து முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தங்கம் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்ந்து வருகிறது, அதே நேரத்தில் வெள்ளி விலை பின்தங்கி இருந்தது, ஆனால் இன்று வெள்ளி விலையும் வரலாற்று உச்சத்தைத் தொட்டதால் வெள்ளி மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 73,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 79,640 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 58,400 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 2000 ரூபாயும், கிராமுக்கு 2 ரூபாயும் உயர்ந்து 1,09,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 150 ரூபாய் உயர்ந்து 27,530 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications