பொதுவாக பங்குச்சந்தையிலும், வர்த்தக சந்தையிலும் பணபுழக்கம் அதிகரிக்கும் போது தங்கம் விலை குறையும், ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் 2024 ஆம் ஆண்டு தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 3 முறை குறைப்பதாக அறிவித்த நிலையில் அமெரிக்க பத்திர சந்தையில் மழைபோல் குவிந்துக்கிடக்கும் டாலர் முதலீடுகள் வெளியேறி பங்குச்சந்தையில் குவிந்தது. ஆனால் தற்போது டாலர் மதிப்பு வேகமாக சரிந்து வரும் காரணத்தால் அதிகப்படியான முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

இதனால் தங்கம் விலை நேற்று காலை வர்த்தகத்தில் இருந்து ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2020 டாலர் அளவிலேயே உள்ளது. இதனால் இந்தியாவிலும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை உயர்ந்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று தங்கம் விலை தடாலடியாக உயர முக்கியமான காரணமாக இருக்கும் அமெரிக்க டாலர் மதிப்பீட்டை அளவிடும் DXY குறியீடு 102.00 ஆக குறைந்துள்ளது, நேற்று 102.67 ஆக இருந்தது. இதன் வாயிலாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று காலை ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2035 டாலராக இருக்கிறது, நேற்றை வர்த்தகத்தில் அதிகப்படியாக 2047 டாலர் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் சந்தையில் பிப்ரவரி மாதம் முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 0.01 சதவீதம் உயர்ந்து 62,463.00 ரூபாய் விலையிலும், மார்ச் மாதம் முடியும் வெள்ளி பியூச்சர்ஸ் ஆர்டரின் விலை 0.17 சதவீதம் சரிந்து 74,948.00 ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால் ரீடைல் சந்தையில் நிலைமையே வேறு.
வெள்ளிக்கிழமை ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 58,300 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 63,600 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 46,640 ரூபாயாக உள்ளது.
இதோடு ரீடைல் சந்தையில் விற்கப்படும் 1 கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் உயர்ந்து 80500 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலையும் 10 கிராமுக்கு 570 ரூபாய் உயர்ந்து 25,710 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications