அமெரிக்கா தும்மினால் இந்தியாவுக்குச் சளிபிடிக்கும் என்பது போல், அமெரிக்கப் பொருளாதாரத்தில் நடந்த மாற்றம் இந்திய சந்தையில் பல பொருட்களின் விலை மாறுகிறது. இதில் முக்கியமாகத் தங்கம் விலை தற்போது 2 வார உயர்வைத் தொட்டு உள்ளது, இதன் மூலம் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் 2024ல் 3 முறை வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பின் மூலம் ஏற்பட்ட சாதகமான மாற்றங்கள் அனைத்தும் மாயமாகியுள்ளது.
அமெரிக்காவின் 3வது காலாண்டு ஜிடிபி குறைவாக இருக்கும், இக்காலாண்டில் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ள காரணத்தால் டாலர் மதிப்பு 4 மாத சரிவைத் தொட்டு உள்ளது. இதனால் பத்திர சந்தையில் இருக்கும் பெரும் பகுதி முதலீடு தங்கம் மீது குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாகச் சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2053 டாலரில் இருந்து 2064 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் இந்திய எம்சிஎக்ஸ் சந்தையிலும் எதிரொலித்த காரணத்தால் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.30 சதவீதம் உயர்ந்து 63,145.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 0.32 சதவீதம் அதிகரித்து 75,626.00 ரூபாயாக உள்ளது.
ரீடைல் சந்தையில் தங்கம் விலை டிசம்பர் 22 ஆம் தேதியில் இருந்து ஒரு கிராமுக்கு சுமார் 70 ரூபாய் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 64,310 ரூபாய்க்கும், 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 150 ரூபாய் அதிகரித்து 58,950 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 58,950 ரூபாய், மும்பை - 58,400 ரூபாய், டெல்லி - 58,550 ரூபாய், கொல்கத்தா - 58,400 ரூபாய், பெங்களூர் - 58,400 ரூபாய், ஹைதராபாத் - 58,400 ரூபாய், கேரளா - 58,400 ரூபாய், புனே - 58,400 ரூபாய், பரோடா - 58,450 ரூபாய், அகமதாபாத் - 58,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 58,550 ரூபாய், லக்னோ - 58,550 ரூபாய், கோயம்புத்தூர் - 58,950 ரூபாய், மதுரை - 58,950 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 64,310 ரூபாய், மும்பை - 63,710 ரூபாய், டெல்லி - 63,860 ரூபாய், கொல்கத்தா - 63,710 ரூபாய், பெங்களூர் - 63,710 ரூபாய், ஹைதராபாத் - 63,710 ரூபாய், கேரளா - 63,710 ரூபாய், புனே - 63,710 ரூபாய், பரோடா - 63,760 ரூபாய், அகமதாபாத் - 63,760 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,860 ரூபாய், லக்னோ - 63,860 ரூபாய், கோயம்புத்தூர் - 64,310 ரூபாய், மதுரை - 64,310 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 47160 ரூபாய், மும்பை - 46720 ரூபாய், டெல்லி - 46840 ரூபாய், கொல்கத்தா - 46720 ரூபாய், பெங்களூர் - 46720 ரூபாய், ஹைதராபாத் - 46720 ரூபாய், கேரளா - 46720 ரூபாய், புனே - 46720 ரூபாய், பரோடா - 46760 ரூபாய், அகமதாபாத் - 46760 ரூபாய், ஜெய்ப்பூர் - 46840 ரூபாய், லக்னோ - 46840 ரூபாய், கோயம்புத்தூர் - 47160 ரூபாய், மதுரை - 47160 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 26,230 ரூபாய், பெங்களூர் - 26,230 ரூபாய், புவனேஸ்வர் - 26,230 ரூபாய், சண்டிகர் - 26,230 ரூபாய், சென்னை - 26,230 ரூபாய், கோயம்புத்தூர் - 26,230 ரூபாய், டெல்லி - 26,230 ரூபாய், ஹைதராபாத் - 26,230 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,230 ரூபாய், கேரளா - 26,230 ரூபாய், கொல்கத்தா - 26,230 ரூபாய், லக்னோ - 26,230 ரூபாய், மதுரை - 26,230 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 81000 ரூபாய், மும்பை - 79500 ரூபாய், டெல்லி - 79500 ரூபாய், கொல்கத்தா - 79500 ரூபாய், பெங்களூர் - 76750 ரூபாய், ஹைதராபாத் - 81000 ரூபாய், கேரளா - 81000 ரூபாய், புனே - 79500 ரூபாய், பரோடா - 79500 ரூபாய், அகமதாபாத் - 79500 ரூபாய், ஜெய்ப்பூர் - 79500 ரூபாய், லக்னோ - 79500 ரூபாய், கோயம்புத்தூர் - 81000 ரூபாய், மதுரை - 81000 ரூபாய்.
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!



Click it and Unblock the Notifications