சென்னை: 2024 ஆம் ஆண்டில் பல்வேறு சர்வதேச காரணிகள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வளர்ச்சி பாதையிலேயே இருந்து வந்தது. 2025 ஆம் ஆண்டிலும் இதே நிலை நீடிக்கும் என இந்தியாவை சேர்ந்த பல்வேறு தரகு நிறுவனங்களும் கணிப்பு வெளியிட்டுள்ளன.
பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது மற்றும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை வளர்ச்சியிலேயே இருந்தது.

அது தவிர அமெரிக்க அதிபர் தேர்தலும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. தங்கத்தின் விலை உயர்வதற்கு மற்றொரு முக்கிய காரணம் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களுடைய பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்வதற்காக பெருமளவில் தங்கத்தை வாங்கி வைத்தன.
2024 ஆம் ஆண்டில் மத்திய வங்கிகள் 500 டன்களுக்கும் அதிகமான அளவிற்கு தங்கத்தை வாங்கி கையிருப்பு வைத்துக் கொண்டன. இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமானது. அதே வேளையில் கோல்ட் ஈடிஎப்-களில் செய்யப்படும் முதலீடுகளின் அளவு அதிகரித்தது. இந்தியாவில் கோல்ட் ஈடிஎப்- களில் முதலீடு செய்த தொகை 30 ஆயிரம் கோடியையும் வெள்ளி ஈடிஎப்-களில் செய்யப்பட்ட முதலீடுகளின் அளவு 7500 கோடியையும் கடந்தது.
இந்தியாவில் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்ததன் காரணமாக பண்டிகை காலங்களில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டில் இந்தியா 700 டன்களுக்கும் அதிகமான தங்கத்தையும் 6000 டன்களுக்கு அதிகமான வெள்ளியையும் இறக்குமதி செய்திருப்பது தெரிய வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை 2025 ஆம் ஆண்டில் பாசிட்டிவ் ஆகவே இருக்கும் என மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்னும் குறிப்பிட்ட நாடுகளில் போர் பதற்றம் தணியாமல் இருப்பதும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுக்கலாம் என்ற பேச்சு பரவுவதாலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயரும் என தெரிவிக்கப்படுகிறது.
தங்கத்தின் விலை கணிசமான வளர்ச்சியையும் வெள்ளியின் விலை வேகமான வளர்ச்சியையும் எட்டும் என மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் ஆய்வாளர் மானவ் மோடி தெரிவித்துள்ளார்.
வெள்ளியை பொருத்தவரை பல்வேறு மின்னணு சாதனங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட தொழில் ரீதியாகவும் வெள்ளிக்கான தேவை அதிகமாக இருப்பதால் 2025 ஆம் ஆண்டில் வெள்ளியின் டிமாண்ட் அதிகரித்து விலை உயரும் என தெரிவிக்கின்றார். தங்கம் , வெள்ளியின் விலை குறையும் போதெல்லாம் வாங்கி வைத்துவிட வேண்டுமென அறிவுரை வழங்குகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?



Click it and Unblock the Notifications