தங்கம்,வெள்ளி விலை உச்சத்திலிருந்து வீழ்ச்சி: இது முதலீடு செய்யசரியான நேரமா- இன்னும் குறையுமா?

சில வாரங்களுக்கு முன்பு வரையில் எட்டாக்கனியாக இருந்து வந்த தங்கம், வெள்ளியை, குறைந்த விலையில் வாங்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காதா என்ற கேள்வியானது பலரின் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில தினங்களாகவே யாரும் எதிர்பாராத அளவுக்கு ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படும் தங்கம், அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து கணிசமான சரிவிலேயே காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பலரின் மத்தியிலும் எழுந்துள்ள ஒரு கேள்வி, இந்த சரிவானது தங்கத்தை வாங்க ஒரு தங்கமான வாய்ப்பா அல்லது விலை இன்னும் குறைய போவதற்கான எச்சரிக்கை மணியா? கையில் இருக்கும் பணத்தை இப்போதே தங்கத்தில் போடலாமா அல்லது சந்தை இன்னும் அடி மட்டத்திற்கு செல்லும் வரை பொறுத்திருக்க வேண்டுமா? உலக அரசியல் மாற்றங்களும், பொருளாதார நகர்வுகளும் தங்கத்தின் எதிர்காலத்தை எப்படி மாற்றப் போகின்றன?, தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவின் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம்,வெள்ளி விலை உச்சத்திலிருந்து வீழ்ச்சி: இது முதலீடு செய்யசரியான நேரமா- இன்னும் குறையுமா?

குறைந்த விலையில் வாங்கலாம்?

தங்கம், வெள்ளி விலையானது இன்று மீண்டும் ஏற்றம் கொண்டிருந்தாலும், அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது சற்று குறைந்தே காணப்படுகிறது. இருப்பினும் விலை உயர்ந்த உலோகங்களில் காணப்படும் இந்த ஏற்ற இறக்கம், தங்கம் ஒரு ஒருங்கிணைந்த கட்டத்தை எட்டுவதற்கான நேரமாகவும் இருக்கலாம். தற்போதைய சூழலில் தங்கம் விலை நீண்ட கால அடிப்படையில் ஏற்றம் காண்பதற்கான எந்த காரணிகளும் மாற்றம் காணவில்லை. ஆக விலை குறையும் போது குறைந்த விலையில் வாங்கிப் போடலாம் என நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.

முக்கிய காரணிகள் என்ன?

அமெரிக்காவின் அடுத்த பெடரல் ரிசர்வ் தலைவராக கெவின் வார்ஷ் நியமிக்கப்படலாம் என்ற செய்தியானது, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் வட்டி விகிதங்களை குறைக்க மாட்டார், பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. இது டாலரின் மதிப்பை உயர்த்தி, தங்கத்தின் மதிப்பை தற்காலிகமாக குறைத்தது. இதனிடையே கடந்த சில மாதங்களாக விலை மிக வேகமாக உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் தங்களிடம் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியை விற்று லாபத்தை பதிவு செய்யத் தொடங்கினர். இது விற்பனை அழுத்தத்தை உருவாக்கியது. இருப்பினும் தற்போது ஒருங்கிணைந்த கட்டத்தில் காணப்படும் தங்கம், வெள்ளியானது, மீண்டும் உயரக்கூடும் என்றாலும், ஒட்டுமொத்த பணத்தையும் இப்போது முதலீடு செய்வது ஆபத்தானது. சந்தை இன்னும் சீரடைய இன்னும் சில காலம் ஆகும் என்பதால், சிறுகச் சிறுக வாங்குவது அல்லது தங்கம்/வெள்ளி ETF-களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

நிபுணர்களின் கணிப்பு?

குவாண்டம் ஏஎம்சியின் தலைமை செயல் அதிகாரி, அமெரிக்க டாலரின் பலவீனம் மற்றும் அதன் இருப்பு குறித்த கேள்விகளே தங்கம் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. வெள்ளியும் தங்கத்தின் பின்னாலே பயணிக்கும். இருப்பினும் வெள்ளியின் தேவையில் பாதிக்கு மேல் தொழிற்துறையில் இருந்து வருகிறது.

ஸ்மார்ட்போன்கள், சோலார் பேனல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் வெள்ளி இன்றியமையாதது. ஆனால் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வெள்ளியின் உற்பத்தி தேவையை விட குறைவாகவே இருந்தது. இந்த தட்டுப்பாடு வெள்ளியின் விலையை ஆரம்பத்தில் நிலையாக உயர்த்தியது. ஆரம்பத்தில் தொழில் துறை தேவைக்காக உயர்ந்த வெள்ளி விலை, சமீபத்திய வாரங்களில் 'போமோ' (FOMO) எனப்படும் வாய்ப்பை தவற விட்டு விடுவோமோ என்ற முதலீட்டாளர்களின் பயத்தினால் உயர்ந்து வருகிறது. இது வெள்ளியின் அடிப்படை தகுதியையும் தாண்டி விலை அதிகரிக்க காரணமாக அமைந்தது.

வரலாற்றை மறக்க கூடாது?

வரலாற்றை மறக்க கூடாது என கூறும் நிபுணர்கள், WhiteOak Capital MF அறிக்கையின்படி, ஒரு சுவாரசியமான ஒப்பீடட்டையும் செய்துள்ளனர். அது தங்கம் பேசும்போது அது உலக அரசியல் பதற்றங்களையும், பொருளாதார ஆபத்துக்களையும் எச்சரிக்கிறது. அதுவே வெள்ளி அலறும் போது, அதாவது வெள்ளி விலையானது தங்கத்தை விட மிக வேகமாக உயர்ந்து அலறத் தொடங்கினால், அது அந்த ஏற்றத்தின் இறுதி நிலையை எட்டி விட்டது என்று அர்த்தம். கடந்த 2011-ல் வெள்ளி 73,288 ரூபாய் என்ற உச்சத்தை தொட்ட பிறகு, அடுத்த சில காலங்களில் 55% சரிந்தது. அந்த வீழ்ச்சியிலிருந்து மீள வெள்ளிக்கு 9 ஆண்டுகள் ஆனது என்பதை முதலீட்டாளர்கள் மறக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

முதலீட்டாளர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என கூறும் நிபுணர்கள், வெள்ளி ஒரு தொழில்துறை பொருள். விலை அதிகமாகும் போது, நிறுவனங்கள் அதற்கு பதிலாக மலிவான மாற்று பொருட்களை தேடலாம். ஆக அது நீண்ட கால அடிப்படையில் நம்பகமற்ற தன்மையால், உங்கள் நீண்டகால போர்ட்ஃபோலியோவில் ஒரு பெரிய பங்காக இருக்க தகுதியற்றது என்று எச்சரிக்கின்றனர்.

தங்கத்தை பொறுத்த வரையில் இன்னும் பாதுகாப்பான புகலிடம் தான். விலை சரிந்தாலும், தங்கத்தின் மீதான அடிப்படை நம்பிக்கை இன்னும் அப்படியே தான் உள்ளது. உலக அரசியல் சூழல் சீரற்றதாக இருப்பதால், மத்திய வங்கிகள் இன்னும் தங்கத்தை ஒரு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகின்றன. எனவே இந்த சரிவை நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு ஆரோக்கியமான மாற்றமாக பார்க்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+