தங்க நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு செம வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 4ஆவது நாளாக தங்கம் விலை குறைந்து இந்த மாதத்திலேயே குறைந்தபட்ச விலைக்கு சென்றுள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 120 ரூபாய் குறைந்து 12,695 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 960 ரூபாய் விலை சரிந்து 1,01,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக விலை குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 560 ரூபாயும் ஒரு சவரனுக்கு 4,480 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 10 கிராமுக்கு 4,600 ரூபாய் விலை குறைந்துள்ளது. இந்த வாரத்தில் திங்கள் கிழமை தவிர்த்து மற்ற 4 நாட்களுமே தங்கம் விலை சரிவில் தான் இருந்துள்ளது. இன்னும் 1560 ரூபாய் சரிந்தால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சம் என்ற மைல்கல்லுக்கு கீழ் செல்லும். நாளைய தினமும் இதே போல நடந்தால் தங்கம் விலை 1 லட்சத்துக்கு கீழ் செல்ல வாய்ப்புள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 13,849 ரூபாய்க்கும் 10 கிராம் 1,38,490 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,390 ரூபாய்க்கும் ஒரு சவரன் 83,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 195 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை சரிந்து 1.95 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை இந்த வாரத்தில் மட்டும் கிராமுக்கு 10 ரூபாயும், கிலோவுக்கு 10,000 ரூபாயும் விலை குறைந்துள்ளது.
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்தது தான் இந்தியாவிலும் தங்கம் விலை சரிய காரணம். அமெரிக்க மத்திய வங்கி மேற்கொண்டு வட்டி உயர்வு நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 3,915 டாலர்களாக இருக்கிறது ஒரு அவுன்ஸ் வெள்ளி 50 டாலர்களாக விலை சரிந்துவிட்டது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.37 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை மேலும் குறையும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

