தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தாறுமாறாக சரிந்து மிடில் கிளாஸ் மக்களுக்கு சர்ப்பிரைஸ் தந்துள்ளன. இதன் மூலம் தங்க நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்து இந்த மாதத்திலேயே குறைந்தபட்ச விலைக்கு சென்றுள்ளது. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 75 ரூபாய் குறைந்து 12,540 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 600 ரூபாய் விலை சரிந்து 1,00,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக விலை குறைந்திருக்கிறது.சவர்னுக்கு இன்னும் 320 ரூபாய் குறைந்துவிட்டால் 1 லட்சம் ரூபாய் என்ற விலைக்கு கீழ் தங்கம் வந்துவிடும். நாளையும் விலை குறைந்தால் நிச்சயம் இதற்கான வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 715 ரூபாயும் ஒரு சவரனுக்கு 5,720 ரூபாயும் விலை சரிந்துள்ளது. 10 கிராமுக்கு 7,150 ரூபாய் விலை குறைந்துள்ளது.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 13,680 ரூபாய்க்கும் 10 கிராம் 1,36,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,260 ரூபாய்க்கும் ஒரு சவரன் 82,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 190 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை சரிந்து 1.90 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து கிராமுக்கு 235 ரூபாயும் கிலோவுக்கு 2.35 லட்சம் ரூபாயும் விலை குறைந்துள்ளது.
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்து வருவதே தமிழ்நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை சரிய காரணம். அமெரிக்க மத்திய வங்கி அடுத்த மாதம் வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி வருவதால் உலக சந்தையில் தங்கம் விலை சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 3,872 டாலர்களாக இருக்கிறது ஒரு அவுன்ஸ் வெள்ளி 47 டாலர்களாக விலை சரிந்துவிட்டது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.35 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது. தங்கம் விலை இன்னும் சில காலம் திருத்தத்திலேயே இருக்கும் என்றும் பெரிய ஏற்றம் இருக்காது என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

