தமிழ்நாட்டில் தொடர்ந்து இரண்டு நாட்களாக விலை மாறாமலேயே இருந்த தங்கம் இன்றைய தினம் விலை குறைந்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. ஜூன் மாதத்தில் தங்கத்தின் விலை 10% வரை சரிவடைந்தது. ஜூலை மாதமும் இதே நிலை காணப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் பின் 4, 5 ஆகிய தேதிகளில் தங்கம் விலை மாறாமல் இருந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் என பல்வேறு நகரங்களிலும் இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 140 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.

அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை ,திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரை 1,09,600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 1,08,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது தங்கம் விலை ஒரு சவரனுக்கு 1,120 ருபாய் விலை குறைந்திருக்கிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 152 ரூபாய் விலை குறைந்து 14,793 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராமுக்கு 1520 ரூபாய் விலை சரிந்து 1,47,930 ரூபாய்கு விற்பனையாகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் 10 கிராம் தங்கம் விலை 1,47,135 ரூபாய் என விலை இறங்குமுகமாகவே உள்ளது.
வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு 10 ரூபாய் என தடாலடியாக ஒரே நாளில் விலை சரிந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிராம் வெள்ளி நேற்று 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒருகிலோ வெள்ளி 2.60 லட்சத்திற்கு விற்பனையானது. அதுவே இன்று கிராமுக்கு 10 ரூபாயும், கிலோவுக்கு 10,000 ரூபாயும் சரிந்துள்ளன. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.50 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.
ஜூலை மாதம் தொடங்கி 3 நாட்கள் விலை உயர்ந்த தங்கம் தற்போது விலை சரிவை நோக்கி பயணிக்க தொடங்கியது. உலக அளவில் எந்த ஒரு போர் சூழல், வர்த்தக மோதல்கள் ஆகியவை நிகழாத பட்சத்தில் தங்கம் விலை இறங்குமுகமாகவே நீடிக்க வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

