தொடர்ந்து 4 வர்த்தக நாட்களாக உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கம் விலை இன்றைய தினம் குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கம், விலை சவரனுக்கு 1.15 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரிவடைந்துள்ளது.
சென்னையில் ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி நேற்று வரை தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தது. குறிப்பாக தினமுக் காலை, மாலை என இரண்டும் வேளையும் தங்கம் விலை உயர்வு கண்டது. தங்கத்துடன் போட்டி போட்டு கொண்டு வெள்ளியும் விலை உயர்வு கண்டது. இந்நிலையில் தான் இன்றைய தினம் தங்கம், வெள்ளி விலை சரிவை கண்டுள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 215 ரூபாய் சரிவடைந்தது. நேற்று ஒரு கிராம் 14,415 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்று வரலாற்றில் இல்லாத உச்சமாக 1,15,320 ரூபாய் என புதிய உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் தங்கம் ஒன்னேகால் லட்சம் ரூபாய் என்ற நிலையை தொட்டது. இனி தங்கம் வாங்க முடியாது என்ற நிலைக்கு மக்கள் மாறிவிட்ட நிலையில் இன்று தங்கம் சவரன் 1,13,600 ரூபாய் என விற்பனையாகிறது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்றைய தினம் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 15,491 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 235 ரூபாய் விலை சரிந்து கிராம் 15,726 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று 1,25,808 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 1880 ரூபாய் விலை குறைந்து 1, 23,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,54,910 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
18 கேரட் தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் 13,850 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளியின் விலையும் குறைந்து இருக்கிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 345 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 5 ரூபாய் விலை குறைந்து 340 ரூபாய்க்கும் ஒரு கிலோ 5000 ரூபாய் விலை குறைந்து 3,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிரீன்லாந்து விவகாரம் பூதாகரமானது தான் தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி வரியை விதிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்க பொருட்களுக்கு போட்டி வரி விதிப்பதாக தெரிவித்திருந்தது.
இதனால் வர்த்தக மோதல் ஏற்படும் அபாயம் உண்டானது. எனவே முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்த பணத்தை எடுத்து தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பான உலோகங்களில் முதலீடு செய்ய தொடங்கினர் . இதுதான் கடந்த நான்கு வர்த்தக நாட்களிலேயே தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயர காரணமாக இருந்தது.
தற்போது இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மீது விதிக்கப்படுவதாக அறிவித்திருந்த வரிவிதிப்பு நடவடிக்கை வாபஸ் பெற்று இருக்கிறார் டிரம்ப். இதன் காரணமாக இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது எனவே தங்கம், வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. வேறு எந்த ஒரு வர்த்தக மோதலும் பதட்டமும் ஏற்படாத பட்சத்தில் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளியின் விலை குறையும் என நிபுணர்கள் கணிப்பு தெரிவிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications