தங்கம், வெள்ளி விலை வீக்எண்டில் சரிவு.. திங்கட்கிழமை காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

இந்திய மக்கள் அனைவரும் சனிக்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் டிவிஸ்டாக தங்கம் விலை 3 சதவீதமும், வெள்ளி விலை 6 சதவீதமும் சரிந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்தியாவில் தன்தேரஸ் மற்றும் தீபாவளி பண்டிகை அதன் பின்பு துவங்க இருக்கும் திருமண சீசன் ஆகியவை இருக்கும் காரணக்தால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என கணிப்புகள் நிலவி வந்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை டிரம்ப்-ன் பேச்சு மொத்த முதலீட்டு சந்தையை தலைகீழாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை. உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வெள்ளிக்கிழமை (அமெரிக்க நேரத்தில்) குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளன. தங்கம் விலை ஓரே நாளில் 3 சதவீதம் வரியில் சரியும் அளவுக்கு டிரம்ப் என்ன சொன்னார்.

தங்கம், வெள்ளி விலை வீக்எண்டில் சரிவு.. திங்கட்கிழமை காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சீனா மீதான 100 சதவீத கூடுதல் வரி விதிப்பு சரியானதாக இருக்காது என்ற கருத்து, சர்வதேச சந்தையிலும் அமெரிக்காவின் வர்த்தக பதற்றத்தை குறைத்துள்ளது. இதனால், பாதுகாப்பு சொத்துகளான தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை குறைந்து, விலை சரிவுக்கு வழிவகுத்துள்ளது.

இந்த சரிவு, தங்கம் வாங்கும் நுகர்வோருக்கு இது நல்ல வாய்ப்பை அளிக்கலாம், ஏனெனில் திங்கட்கிழமை சந்தை திறக்கும் போது மேலும் சரிய வாய்ப்புள்ளது என கலவையான கருத்துக்களும், எதிர்பார்ப்புகளும் உள்ளது.

சீனா மீதான 100% வரி - டிரம்பின் கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி ஏற்புடையதாக இருக்காது என்று கூறியுள்ளார். ஃபாக்ஸ் பிஸினஸ் உடனான பேட்டியில், இந்த வரி அளவு பொருளாதாரத்தை பாதிக்காமல் தொடர முடியாது என்று அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், சீனாவின் செயல்கள் தான் இதை தன்னை இப்படி அதிகப்படியான வரியை விதிக்க தூண்டியது என்று அவர் குற்றம்சாட்டினார்.

சீனாவின் அரிய தாதுக்கள் மீதான புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தான் டிரம்ப்-ஐ 100 சதவீத வரி விதிக்க தூண்டியது. டிரம்ப்-ன் இந்த கருத்து அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் பதற்றத்தை குறைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் கடந்த 3 வாரங்களாக நிலவிய உலக பொருளாதார அச்சங்களை குறைத்து, தங்க சந்தையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா-சீனா வர்த்தக போர் கடந்த காலங்களில் உலக பொருளாதாரத்தை பாதித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால் இப்போது டிரம்ப் விதித்த 100 சதவீத வரி நவம்பர் 1ஆம் தேதி நடைமுறைக்கு வரும் முன்பே நிலைமை சீராகலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் இம்மாத இறுதியில் சந்திக்க உள்ளார், இந்த சந்திப்பில் இருநாடுகள் மத்தியில் நிலையான வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான பிரச்சனைகளை முக்கியமான விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியாவில் நடைபெறும் ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் (ஏபெக்) ஒரு பகுதியாக டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு நடக்க உள்ளது. இந்த பேட்டியில் ஜி ஜின்பிங் உடன் நல்ல உறவு உள்ளது என்று கூறிய டிரம்ப், சீனாவுடன் நியாயமான ஒப்பந்தம் தேவை என்று வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தலாம் இதேபோல் வர்த்தக பதற்றங்களை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் நடந்தால் அமெரிக்க கடன் தரம் குறித்த அச்சங்கள் குறைந்து, வர்த்தக பதற்றம் தணிவதும், தங்கம் மற்றும் வெள்ளியின் பாதுகாப்பு தேவையை குறைத்துள்ளது இதன் விலையை குறைக்கும்.

தங்க விலை சரிவு
வெள்ளிக்கிழமை டிரம்ப்-ன் பேச்சுக்கு பின்பு சர்வதேச சந்தையில் தங்கம் விலை 2 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் ஸ்பாட் சந்தை விலை 2.6 சதவீதம் குறைந்து 4,211.48 டாலர்களாக உள்ளது, இது நேற்றைய வர்த்தக தொடக்கத்தில் எட்டிய 4,378.69 டாலர் உச்சத்தில் இருந்து பெரும் சரிவாகும்.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் தான் ஒரு அவுன்ஸ் தங்கம் முதல் முறையாக 4,300 டாலர்களை தாண்டியது, இந்த சரிவுக்கு பின்பும் வாராந்திர லாபம் சுமார் 4.8 சதவீதமாக உள்ளது. இந்த சரிவு, அமெரிக்க டாலரின் வலிமை அடைவது மற்றும் வர்த்தக அச்சங்கள் குறைந்ததால் ஏற்பட்டது. விலை குறைவால் தங்க வாங்குவோருக்கு வாய்ப்பை அளித்துள்ளது.

வெள்ளி விலை சரிவு
இதேபோல் வெள்ளி விலை 6 சதவீதத்துக்கும் மேல் சரிந்து, கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இந்த வாரம் வெள்ளி விலை தனது புதிய உச்சமான ஒரு அவுன்ஸ் 54.50 டாலர்களை எட்டியது, இந்த விரைவான உயர்வுக்குப் பின் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 51.20 டாலர்களாக குறைந்தது.

ரீடைல் சந்தை
இன்றைய சென்னை ரீடைல் வர்த்தகத்தில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 2000 ரூபாய் குறைந்து 1,20,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 2000 ரூபாய் குறைந்து 1,30,910 ரூபாயாக உள்ளது. காலை வர்த்தகத்தில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 11950.00 ஆக இருந்த வேளையில் மாலையில் 12000.00 அளவை எட்டியது.

வெள்ளி விலை கிராமுக்கு 13 ரூபாயும், கிலோவுக்கு 13000 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 1,90,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+