இந்தியாவில் தங்கம் விலை என்பது சர்வதேச சந்தையில் நிலவும் வர்த்ககம் மற்றும் டாலர் - யூரோ ஆகியவற்றுக்கு எதிரான இந்திய ரூபாய் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் உள்நாட்டு வர்த்தகத்தின் தாக்கம் என்பது மிகவும் சிறிய அளவே, இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் இந்தியாவில் தன்தேரஸ் மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாக இருந்தும் இதன் விலை குறைந்துள்ளது.
தீபாவளி நாளில், இன்று ரீடைல் சந்தையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. வட இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் தன்தேரஸ் நாளில் தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்தது. ரீடைல் சந்தையில் மட்டுமே இந்த சரிவு பதிவாகியுள்ளது, எம்சிஎக்ஸ் சந்தையிலும் சர்வதேச சந்தையிலும் இதன் போக்கு மாறுப்பட்டதாக உள்ளது.

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் லேசாக உயர்வுடன் உள்ளது, டிரம்ப்-ன் பேச்சுக்கு பின்பு அமெரிக்காவில் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகித குறைப்புக்குகான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது மற்றும் இந்த வாரம் வெளியாக இருக்கும் அமெரிக்க பணவீக்க தரவுகள், அமெரிக்க-சீனா வர்த்தக பேச்சுவார்த்தை ஆகியவை தங்கம் விலையின் போக்கை தீர்மாணிக்கும்.
இதனால் முதலீட்டாளர்கள் தங்கம் விலை குறைந்துள்ளது என கண்களை மூடிக்கு கொண்டு வாங்கவும், விற்கவும் கூடாது, கவனமாக சந்தையின் போக்கை கவனித்து முதலீடு செய்ய வேண்டும்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் ஸ்பாட் விலை இன்று காலை ஆசிய சந்தை துவங்கியதில் இருந்து 0.1 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,253.33 டாலர் என்ற அளவில் உள்ளது. அமெரிக்க டிசம்பர் தங்க பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் 1.3 சதவீதம் உயர்ந்து 4,266.30 டாலர் என்ற விலையில் வர்த்தகமாகின்றன.
இதேபோல் வெள்ளியின் விலை 0.5 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸுக்கு 52.12 டாலர் என்ற அளவில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, வெள்ளி விலை 4 - 6 சதவீதம் வரையில் சரிந்து ஏப்ரல் மாத்தில் இகுந்து மிகப்பெரிய இழப்பை பதிவு செய்தது. வெள்ளியின் உச்சபட்ச விலை என்பது 54.47 டாலர் என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த வேளையில் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை சரிய முக்கிய காரணம் டிரம்ப்-ன் பேச்சு தான். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பது ஒரு நிலையானதாக இருக்காது என்று கூறினார். இதேவேளையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு நடக்கும் என்றும், சீனாவுடன் நல்ல உறவு இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்த கருத்துகள், அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக பதற்றத்தை தணித்து, தங்கத்தின் பாதுகாப்பு தேவையை குறைத்தது. இதனாலேயே தங்கம் விலை குறைந்தத, ஆனால் இப்போது வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு, பணவீக்க தரவுகள் ஆகியவற்றின் காரணமாக விலை உயர்வு காணப்படுகிறது.
கடந்த 3 நாட்கள் சரிவை சேர்த்து இந்த ஆண்டு தங்கம் விலை சுமார் 60 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது, கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ்-க்கு சுமார் 4,378.69 டாலர் என்ற உச்சத்தை எட்டியது.
சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவது, டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, இடிஎஃப் மீதான முதலீடுகள் ஆகியவை தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
தற்போது இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீது செய்து வந்த தாக்குதல் நிறுத்தியது, ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான பேரில் உருவான தற்காலிக அமைதி, சீனா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக போர் பதற்றம் குறைந்தது ஆகியவை தங்கத்திற்கான தேவையை குறைத்து வருகிறது. ஆனாலும் அமெரிக்காவின் பணவீக்கமும், பென்ச்மார்க் வட்டி விகிதமும் தங்கம் விலையை இனி வரும் காலத்தில் தீர்மாணிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.
இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், சர்வதேச சந்தையில் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் உயர்வுடன் உள்ளது. இதனால் இந்த விலை உயர்வு மாலை வர்த்தகத்தில் எதிரொலித்து ரீடைல் சந்தையில் மாறலாம் அல்லது நாளைய வர்த்தகத்தில் எதிரொலிக்கலாம். எனவே தங்கம் விலை மீதான சரிவு தொடர்வது கடினம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!



Click it and Unblock the Notifications