ஈரான் போர் தொடங்கியது முதலே சென்னையில் படிப்படியாக குறைந்த வண்ணம் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை புதிய சரிவை சந்தித்தது. இதனால் சாமானிய மக்கள் பெரிய அளவில் நிம்மதி அடைந்தனர்.
பிப்ரவரி 28-ஆம் தேதி மற்றும் மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு நேற்று மாலை வரை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவிலே தான் இருந்து வந்தது. ஆனால் நேற்று மாலையில் இருந்து தங்கம் விலை உயர தொடங்கிவிட்டது. நேற்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, நேற்று காலையுடன் ஒப்பிடும் போது இது 250 ரூபாய் உயர்வு.

இந்த சூழலில் தங்கம் விலை இன்று காலையும் உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 350 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே ஒரு சவரன் தங்கம் நேற்று மாலை 1,06,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று காலை சவரனுக்கு 2800 ரூபாய் விலை உயர்ந்து 1,08,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் ஆபரண தங்கம் நேற்று மாலை, இன்று காலை என மொத்தமாக இரண்டு வேளையும் ஒரு கிராமுக்கு 600 ரூபாயும் ஒரு சவரனுக்கு 4800 ரூபாயும் விலை உயர்வு கண்டுள்ளது. ஈரான் போர் அமைதியை நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் தென்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிந்து உலக சந்தையில் தங்கம் விலை கூடி இருக்கிறது. இதுதான் சில்லறை வணிகத்திலும் தங்கத்தின் விலை உயர முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
தங்கத்தை அடுத்து வெள்ளியின் விலையும் இன்றைய தினம் உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் விலை உயர்ந்த 260 ரூபாக்கும் ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் விலை உயர்ந்து 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மார்ச் 1ஆம் தேதியில் இருந்து மார்ச் 24ஆம் தேதி வரை தங்கம் , வெள்ளி விலை பெருமளவில் சரிவை கண்டது. மார்ச் 1 இல் ஒரு சவரன் தங்கம் 1,26,000 ரூபாயாக இருந்து பின்னர் 1,04,000 வரை சரிவை கண்டது. இந்நிலையில் மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications