சென்னையில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் குறைந்து மக்களுக்கு சற்றே ஆறுதலை தந்திருக்கிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் டிசம்பர் மாதத்தில் ஒரு லட்சம் ரூபாயை எட்டியது . இதனை அடுத்து தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் தான் இருந்து வந்தது. அதிகபட்சமாக டிசம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக ஒரு கிராமின் விலை 13 , 100 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,04,800 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது.

தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்தது மட்டுமில்லாமல் நாள்தோறும் ஆயிரம் ரூபாய் உயர்கிறது என மிடில் கிளாஸ் மக்கள் கண்ணீர் வடிக்க தொடங்கினர். இந்த சூழலில் தான் பொதுமக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய வகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் விலை குறைந்து 13 ,020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் விலை குறைந்து 1,04,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,30,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கமும் இன்று விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு 87 ரூபாய் விலை சரிந்து 14,204 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 696 ரூபாய் விலை சரிந்து 1,13, 632 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 10 கிராமின் விலை 1,42,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கம் ஒரு கிராம் 85 ரூபாய் விலை சரிந்து 10,865 ரூபாய்க்கு விற்பனையாகிறது 18 கேரட் தங்கம் ஒரு சவரன் 86 ,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . ஆண்டு இறுதி என்பதால் விடுமுறை தினத்தை கழிப்பதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் தங்கம் உள்ளிட்டவற்றிலிருந்து தங்களுடைய லாபத்தை பதிவு செய்து வருகின்றனர் . இது இதன் விலை குறைவுக்கு காரணமாக இருக்கிறது.
வெள்ளியை பொருத்தவரை இன்றைய தினம் வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது . சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நான்கு ரூபாய் விலை குறைந்து 281 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 4 ஆயிரம் ரூபாய் விலை குறைந்து 2 , 81,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?



Click it and Unblock the Notifications