தங்கம் விலை திடீர் உயர்வு..!! வெள்ளி விலையும் ரூ.5000 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி..!!

தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று திடீரென உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்று வரை தங்கம் விலை இறங்குமுகமாகவே இருந்தது ஆனால் இன்று காலை தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் நேற்று ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனையானது இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து 13,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 240 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,05,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் இதே விலைக்கு தான் ஆபரண தங்கம் விற்கப்படுகிறது.

தங்கம் விலை திடீர் உயர்வு..!! வெள்ளி விலையும் ரூ.5000 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி..!!

கடந்த சனிக்கிழமை தொடங்கி செவ்வாய் வரையிலான மூன்று வர்த்தக நாட்களில் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை குறைந்தது, ஒரு சவரன் என பார்க்கும்போது 1600 ரூபாய் விலை சரிந்தது. ஆனால் இன்றைய தினம் விலை கூடிவிட்டது. இருந்தாலும் இது ஒரு லேசான விலை உயர்வு தான். தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு இன்று கூட நல்ல வாய்ப்பு தான்.

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14,378 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராமுக்கு 320 ரூபாய் விலை உயர்ந்து 1,43,780 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 30 ரூபாயும் ஒரு சவரனுக்கு 240 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. அந்தவகையில் ஒரு கிராம் 11,000 ரூபாய்க்கும் ஒரு சவரன் 88,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை உயர்வு கண்டு 240 ரூபாக்கும், ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளி கடந்த 2 மாத காலமாகவே பெரிதாக விலை ஏறவில்லை. தொடர்ச்சியாக விலை குறைவில் தான் இருக்கிறது.

ஈரான் போர் தீவிரமடைந்ததால் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தங்கம், வெள்ளி விலை குறைந்தது. இந்நிலையில் இன்று டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டணம் வசூல் செய்வதை கைவிடுவதாக அறிவித்தது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் , வெள்ளி லேசாக குறைந்துள்ளது. இனி வரும் நாட்கள் போரின் போக்கை தொடர்ந்து தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+