தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்.. டிரம்ப் கட்சி தோல்வியால் இந்தியர்களுக்கு சிக்கல்...!!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி பெரும்பான்மையை தவறவிட்டு தோல்வி அடைந்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சபையில் ஆதிக்கம் பெற்றுள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியான உடனே தங்கம் விலை உயர தொடங்கிவிட்டது.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் டாலரின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனால் உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததோடு இந்தியாவில் கோல்டு மற்றும் சில்வர் எடிஎஃப் விலைகளும் 6% வரை உயர்ந்தன. அமெரிக்க அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது பணத்தை போட தொடங்கினர். இதனால் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது.

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்.. டிரம்ப் கட்சி தோல்வியால் இந்தியர்களுக்கு சிக்கல்...!!

சில்லறை விற்பனையில் தங்கம் விலை இன்று காலை, மாலை என இரண்டு வேளையும் மாறியுள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 300 ரூபாய் உயர்ந்து 13,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 2,400 ரூபாய் விலை கூடி 1,04,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 210 ரூபாய்க்கும் கிலோவுக்கு 10,000 ரூபாய் உயர்ந்து 2.10 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. எனவே இன்னமும் விலை குறையட்டும் என தங்கம், வெள்ளி வாங்காமல் காத்திருந்தவர்கள் சிக்கலில் உள்ளனர்.

Also Read

டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்த உடனே உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைய தொடங்கியது. அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததால் தங்கம் ,வெள்ளி பிளாட்டினம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களின் விலை ஏறத் தொடங்கியது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாக 4,000 டாலருக்கு கீழ் தான் வர்த்தகமாகி வந்தது. ஆனால் அமெரிக்க தேர்தல் முடிவு வெளியான உடனேயே தங்கம் விலை 2.64 % உயர்வு கண்டு 4,031 டாலர்களாக வர்த்தகமானது. வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்து 4.17 % அதிகரித்து 52 டாலர்களாக இருந்தது. அதேபோல பிளாட்டினத்தின் விலையும் 2.8% உயர்வு கண்டது.

அமெரிக்க டாலர் மதிப்பு சரியும் போதெல்லாம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயரும். அப்படித்தான் டிரம்பின் பின்னடைவு அமெரிக்க டாலர் மதிப்பை குறைய செய்தது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயர்வு கண்டன. இந்த மாற்றம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.

Recommended For You

இந்தியாவில் இன்று எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை காலை வர்த்தகம் தொடங்கும் போது 1,39,000 ரூபாய் என்ற விலையில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 1,42,300 ரூபாய் என ஆனது. வெள்ளியின் ஒரு கிலோ காலை வர்த்தகம் தொடங்கும் போது 1.78 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட 7000 ரூபாய் அதிகரித்து 1,86,000 ரூபாய் என்ற விலையை அடைந்தது.

உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்ததால் , இந்தியாவில் கோல்டு மற்றும் சில்வர் ஈடிஎஃப்களின் மதிப்புகள் இன்று 6% வரை உயர்வு கண்டன. நிப்பான் இந்தியா, ஐசிஐசிஐ ஈடிஎஃப்கள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்தன.

தங்கம் விலை தனது வரலாற்று உச்சத்தில் இருந்து 24% வரை சரிந்துள்ளது. தீபாவளி வரை இந்த விலை சரிவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை லேசாக உயர்ந்து வந்தது, அமெரிக்க தேர்தல் முடிவு எதிரொலியாவில் ஒரே நாளில் கணிசமாக உயர்ந்துவிட்டது.

அமெரிக்க பங்குச்சந்தை இந்தியாவுக்கு இரவு ஆகும் போது தான் தொடங்கும் , எனவே நாளை காலை அமெரிக்க பங்குச்சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கம் விலையில் மாற்றத்தை காணலாம், மேலும் அதிபர் டிரம்ப் இன்றிரவு ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட்டாலும் தங்கம் விலை மாறும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+