மறைமுகமாக தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா , சீனா..!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!!

உலக சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பிறகு நவம்பர் மாதத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இத்துடன் தங்கத்தின் விலை உயர்வு நின்றுவிட்டது என அனைவரும் கருதினர். ஆனால் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வேகமாக உயர தொடங்கி இருக்கிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. திங்கட்கிழமையான இன்று ஸ்பாட் கோல்ட் ஒரு அவுன்சின் விலை 4,383.73 டாலர்கள் என வர்த்தகமாகிறது . அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது இது 3, 93,265 ரூபாய் ஆகும். ஒரு அவுன்ஸ் என்பது 28.34 95 கிராம் அளவுக்கு சமமாகும். அப்படி பார்க்கும்போது உலக சந்தையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13,868 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து இன்று வரை மட்டும் 67% தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.

மறைமுகமாக தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா , சீனா..!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 69 டாலர்களாக இருக்கிறது. 69 டாலர்கள் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 6,187 ரூபாய் ஆகும். அப்படி என்றால் உலக சந்தையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 218 ரூபாயாக இருக்கிறது . 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்த ஆண்டில் வெள்ளியின் விலை இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர் .

மறைமுகமாக தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா , சீனா..!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!!

தங்கம் மற்றும் வெள்ளி இந்த விலை உயர்வு தொடர்ந்து இப்படியே நீடிக்குமா அல்லது விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதுதான் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கு நாம் தங்கம், வெள்ளி உயர்வுக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்வது அவசியம் . தங்கம், வெள்ளியின் விலை உயர்வுக்கு அமெரிக்காவும் சீனாவுமே காரணம் என்பது தான் உண்மை. இந்த இரண்டு நாடுகளும் மறைமுகமாக இந்த உலோகங்களின் விலையை உயர்த்துகின்றன.

அமெரிக்காவில் டிரம்ப் பதவி ஏற்ற பின் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக மோதலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் , பணவீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைவாசி உயர்ந்திருக்கிறது . இந்த நிலைமையை சரி செய்வதற்காக அமெரிக்க மத்திய வங்கி 2026 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு முறை வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மிக வலுவாக இருக்கிறது.

மறைமுகமாக தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா , சீனா..!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!!

எனவே வங்கி டெபாசிட்டுகள் இனி தங்களுக்கு லாபம் தராது என்பதால் முதலீட்டாளர்கள் பணத்தை தங்கத்தை நோக்கி திருப்பி விடுகிறார்கள். இது தங்கத்தின் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம். மற்றொருபுறம் அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் கையில் இருக்கும் பணத்தை அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்கமாக வாங்கி இருப்பு வைக்க தொடங்கியிருக்கின்றன .

சீனாதான் இதற்கு அடித்தளமிட்டது. டாலரை மதிப்பிழக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே சீனா அதிகமாக தங்கம் வாங்கி வைக்கிறது. இதனையே மற்ற சின்ன நாடுகளும் பின் தொடர்கின்றன. இது உலக தங்க சந்தையில் ஒரு மிகப்பெரிய அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த காரணங்களால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து அதன் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. 2026இலும் இதே நிலைமை நீடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

வெள்ளிக்கான தேவை தொழில் ரீதியாக அதிகரித்து இருக்கிறது. அண்மையில் அமெரிக்க அரசாங்கம் வெள்ளியை அரிய வகை கனிமங்களில் ஒன்றாக சேர்த்தது. சீனா ஜனவரியில் இருந்து வெள்ளிக்கான ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது., இவை அனைத்தும் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கின்றன. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலக அளவில் வெள்ளிக்கான தேவை அதிகரித்து இருக்கிறது ஆனால் சப்ளை குறைவாக இருக்கிறது. அமெரிக்கா , சீனாவின் இந்த மறைமுக செயல்களால் தங்கம், வெள்ளியின் விலை உயர்வு நீடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+