தங்கம், வெள்ளி விலை: பிப்ரவரியில் நடந்த மேஜிக் மார்ச் மாதத்திலும் தொடருமா?

2025 ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மிக வேகமாக உயர்ந்தன. 2026 ஆம் ஆண்டிலாவது தங்கம் விலை குறையுமென மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஜனவரியில்தான் இன்னும் வேகமாக தங்கத்தின் விலை உயர்ந்தது.

சென்னையில் ஜனவரி 1ஆம் தேதியன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமின் விலை 12,440 ஆக இருந்தது. அதாவது ஒரு சவரன் 99,520 ரூபாயாக இருந்தது. அதுவே படிப்படியாக உயர்ந்த தங்கம் ஜனவரி 29ஆம் தேதி அன்று வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலையை கட்டியது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 16,800 ரூபாய் என்றும் ஒரு சவரன் 1,34,400 ரூபாய் என்றும் உயர்ந்தது.

தங்கம், வெள்ளி விலை: பிப்ரவரியில் நடந்த மேஜிக் மார்ச் மாதத்திலும் தொடருமா?

இனி அவ்வளவுதான் தங்கம் விலை ரெக்கை கட்டி பறக்க போகிறது என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் அடுத்த நாளே பெரும் அளவில் விலை சரிந்தது. பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து தங்கத்தின் விலையில் ஒரு பெரிய மேஜிக்கே நடந்தது என கூறலாம். பிப்ரவரி 2ஆம் தேதி அன்று ஒரு கிராம் 13,950 ரூபாய் எனவும், ஒரு சவரன் 1,11,600 ரூபாய் என்றும் சரிந்தது.

இதன் பிறகு தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்து வருகிறது. இந்த மாதம் முழுவதுமே தங்கம் விலை ஒரு நாள் விலையேறும் , ஒரு நாள் விலை இறங்கும் என்ற நிலையில் தான் நீடிக்கிறது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை தங்கத்தின் விலை பெரிய மாற்றம் இல்லை . நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,930 ரூபாய்க்கு விற்கப்பட்டது அதுவே இன்று பத்து ரூபாய் விலை குறைந்து 14 ,920 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து1,19,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 11 ரூபாய் விலை குறைந்து 16,287 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் விலை குறைந்து 1,30, 216 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் 12,765 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,02,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இன்று தங்கம் விலை பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வெள்ளியின் விலை ஜனவரி மாதத்தில் ஒரு கிலோ 4,20,000 என வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் சரிவடைந்து பிப்ரவரி மாதம் முழுவதும் 2.65 லட்சத்தில் இருந்து 3 லட்சத்திற்குள் விலை நீடிக்கிறது. இன்று ஒரு கிராம் 295 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம்,வெள்ளி விலையில் பெரிய உயர்வு இல்லை. அதுவே மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயம். பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று பெரிய அளவில் சரிந்த தங்கம் அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட விலைக்கு உள்ளாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 1,13,000 ரூபாயிலிருந்து 1, 20,000 ரூபாய்க்கு உள்ளாக ஏறி இறங்கி வருகிறது.

சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் கிடைத்த லாபம் போதும் என விற்பனை செய்து லாபம் பார்த்தது , அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டது , ஈரான் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை உள்ளிட்ட காரணங்களாலும் அமெரிக்க டாலர் வலுவடைந்ததாலும் பெரிய அளவில் தங்கம் விலை உயரவில்லை.

ஆனால் இதே நிலை மார்ச் மாதமும் நீடிக்குமா என்றால் சர்வதேச சூழல்களை பொறுத்து தான் இது மாறும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது உள்ள விலை குறைவே ஒரு வாய்ப்பு தான் என்கின்றனர். நீண்ட கால அடிப்படையில் தங்கத்தை நம்பி முதலீடு செய்யலாம் என கூறுகின்றனர். அதே போல நகை வாங்குவோர் இந்த விலை குறைவை பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+