சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்றைய தினம் தடாலடியாக உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் இந்த விலை உயர்வுக்கு டிரம்பால் ஏற்பட்டுள்ள போர் பதற்றமே காரணம்.
திங்கள்கிழமை முதல் நேற்று வரை சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியில் விலை இறங்குமுகமாகவே இருந்தன. 22 கேரட் ஆபரண தங்கம் திங்கட்கிழமை கிராமுக்கு 120 ரூபாய் விலை குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 90 ரூபாய் குறைந்து 14,230 ரூபாய்க்கு விற்பனையானது.

தொடர்ந்து மூன்று நாட்களாக விலை குறைந்துள்ளதே இனி தங்கத்துக்கு இறங்குமுகம் தான் என அனைவரும் கொண்டாடிய நிலையில் மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கி விட்டது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 270 ரூபாய் விலை உயர்ந்து 14,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் 2160 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 1,13, 840க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று 1, 16,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,45,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் நேற்றைய விட இன்று கிராமுக்கு 294 ரூபாய் விலை உயர்ந்து 15,818 ரூபாய்க்கும் ஒரு சவரம் 1,26,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் 12,400 ரூபாய்க்கும் ஒரு சவரன் 99,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து குறைந்த வந்த வெள்ளியின் விலை இன்றைய தினம் தடாலடியாக உயர்ந்திருக்கிறது.
சென்னையில் திங்கட்கிழமை தொடங்கி நேற்று வரை வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் 10 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோவுக்கு 10,000 ரூபாய் விலை அதிகரித்து 2 ,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து குறைந்து வந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே இன்றைய தினம் விலை உயர்வு கண்டிருப்பதற்கு ஈரான் விவகாரம் தான் முக்கிய காரணம். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் நிலையில் திடீரென அமெரிக்கா மத்திய கிழக்கில் தன்னுடைய போர் கப்பல் மற்றும் போர் விமானங்களை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது நீண்ட கால ராணுவ தாக்குதலை நடத்த தயாராக கூடிய வகையில் அமெரிக்கா தன்னுடைய போர்க்கப்பல்களை அந்த பிராந்தியத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஈரானில் போர் பதற்றம் உண்டாகி இருக்கிறது. ஒரு வேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் அதற்கான அடித்தளமாக ராணுவ குவிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications