சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து இருக்கிறது. பிப்ரவரி மாத தொடக்கம் முதலில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த வாரம் தொடக்கம் முதல் அதாவது திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான 3 நாட்களில் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.
சென்னையில் ரீடெய்ல் வர்த்தகத்தில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை திங்கள் அன்று ஒரு கிராம் 120 ரூபாய் விலை குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமையான நேற்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 90 ரூபாய் குறைந்து 14,230 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று 720 ரூபாய் விலை சரிவடைந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான இந்த மூன்று நாட்களில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 330 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2640 ரூபாயும் விலை சரிவடைந்து இருக்கிறது.
24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்திருக்கிறது. ஒரு கிராம் 98 ரூபாய் விலை சரிந்து 15, 524 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் 784 ரூபாய் குறைந்து 1,24,192 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 70 ரூபாய் குறைந்து 12,180 ரூபாய்க்கும் ஒரு சவரன் 560 ரூபாய் குறைந்து 97,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியை பொருத்தவரை தொடர்ந்து விலை சரிவடைந்த வண்ணம் இருக்கிறது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 260 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விட இன்று கிராமுக்கு 5 ரூபாயில் ஒரு கிலோவுக்கு 5000 ரூபாய் குறைந்திருக்கிறது. வெள்ளி விலை ஜனவரி 29ஆம் தேதி ஒரு கிராம் 420 ரூபாய் என வரலாற்று உச்சம் தொட்ட நிலையில் அதன் பின்னர் வேகமாக விலை சரிந்து 260 ரூபாய் என ஆகி இருக்கிறது.
தங்கம் , வெள்ளியின் இந்த விலை அப்படியே நீடிக்கும் என்பது தான் மக்களிடையே இருக்கும் குழப்பம். இதற்கு குறுகிய காலத்திற்கு தங்கம், வெள்ளி விலை இப்படி சற்றே ஏற்ற இறக்க நிலையிலேயே தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்கா ரஷ்யா இடையே உக்ரைன் விவகாரத்தில் அமைதி ஏற்படும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் குறையும் என கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications