தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து பொதுமக்களுக்கு கலக்கத்தை தருகின்றன. தங்கத்தை விட மிக வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை நெருங்கி இருக்கிறது . வெள்ளியின் விலை ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்து வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது .
தங்கம், வெள்ளி விலை டிசம்பர் மாதத்தில் பெருமளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. வரலாற்றிலேயே இல்லாத அளவாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது .டிசம்பர் 15ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 12, 515 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து விற்பனையானது.

டிசம்பர் 15ஆம் தேதிக்கு பின் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 80 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று 12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 12,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்து 99,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 87 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 13,615 ரூபாய்க்கும் , 10 கிராம் 1,36,150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 10,420 ரூபாய்க்கும் ஒரு சவரன் 83,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ 5000 ரூபாய் விலை உயர்ந்து 2,31,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை டிசம்பர் 1ஆம் தேதி 196 ரூபாயாக இருந்து இன்று வரை கிராமுக்கு 35 ரூபாய் உயர்வு கண்டுள்ளது. வெள்ளி விலை போகிற போக்கில் இந்த ஆண்டு இறுதிக்குள் கிராம் 250 ரூபாயை எட்டிவிடும் போல இருக்கிறது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் 10 கிராமின் விலை 0.92 சதவீதம் விலை உயர்ந்து 1,35,245 ரூபாய் என வர்த்தகமாகிறது. வெள்ளி ஒரு கிலோ வரலாற்று உச்சமாக ஒரே நாளில் 2.66 சதவீதம் உயர்ந்து 2,13,978 ரூபாய் என வர்த்தகம் செய்யப்படுகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் இப்படி விலை உயர்ந்து இருப்பது தொடர்ந்து தங்கம் , வெள்ளி விலை ஏறுமுகமாகவே இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு, வெள்ளி ஏற்றுமதிக்கு சீனா விதித்த தடை உள்ளிட்டவை காரணமாக தொடர்ந்து தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications