சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 24 மணி நேரத்திலேயே சவரனுக்கு சுமார் 3,000 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது . நேற்று ஒரே நாளில் மட்டும் காலை , மாலை என இரண்டு முறை விலை உயர்ந்தது . இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த ஆண்டின் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை விலை தான் மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் பின்பற்றப்படுகிறது என்பதால் இந்த விலை நிலவரங்களை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம். சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையான நேற்று காலை ,மாலை என இருவேளையும் கிராமுக்கு 170 ரூபாய் விலை உயர்ந்தது . இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 12,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது .

இன்று ஒரு கிராம் 200 ரூபாய் உயர்ந்து 12,770 ரூபாய் என வரலாற்று உச்சத்தை எட்டிவிட்டது. ஒரு சவரன் தங்கம் என பார்க்கும்போது நேற்றைய தினம் 1,00,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1600 ரூபாய் விலை உயர்ந்த 1,02,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை தொடங்கி இன்று காலை வரையிலான இந்த 24 மணி நேரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 370 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2960 ரூபாயும் உயர்வு கண்டுள்ளது.
தங்கத்தின் விலை இப்படி 24 மணி நேரத்திலேயே சுமார் 3 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களில் இருக்கக்கூடிய சூழலில் தங்கம் விலை இன்னும் பல மடங்கு உயருமோ என்ற அச்சம் மக்களை ஆட்கொள்ள தொடங்கி இருக்கிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 218 ரூபாய் விலை உயர்ந்த 13,931 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 1,11,448 ரூபாய்க்கும் 10 கிராம் 1,39,310 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே போல 18 கேரட் தங்கமும் விலை உயர்ந்துள்ளது. இன்று 18 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 160 ரூபாய் விலை உயர்ந்து 10,650 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1280 ரூபாய் விலை உயர்ந்து 85,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி பொறுத்தவரை இன்றைய தினமும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு மூன்று ரூபாய் விலை உயர்ந்து 234 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 2,34,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே இந்த ஆண்டின் உச்சபட்ச விலையில்தான் விற்பனை ஆகின்றன.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே பெரிய அளவில் உயர்வு கண்டிருக்கிறது. 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.08 சதவீதம் உயர்ந்து 1,38,217 ரூபாயாகவும் வெள்ளியின் விலை ஒரு கிலோ 1.47 சதவீதம் உயர்வு கண்டு 2,16 ,000 ரூபாயாகவும் வர்த்தகமாகிறது . சர்வதேச சூழல்களே தங்கம் மற்றும் வெள்ளியின் இந்த விலை உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்


Click it and Unblock the Notifications