சென்னையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது . தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கக்கூடிய சூழலில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.
தங்கம் விலை: சென்னையில் இப்போதெல்லாம் தங்கத்தின் விலை ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஏற்றம் கண்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் உள்நாட்டு தங்கத்தின் தேவை ஆகிய இரண்டும் நான் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. சென்னையை பொருத்தவரை இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு கண்டிருக்கிறது.

இன்று விலை என்ன: 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று 11,500 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் இன்று கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 11,525 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . தங்கம் ஒரு சவரன் 200 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது . நேற்று 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 92 ,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து இன்று வரை 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 575 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது ஒரு சவரனுக்கு என பார்த்தால் 4600 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது.
24 கேரட், 18 கேரட் தங்கம் விலை: அடுத்ததாக 24 கேரட் தங்கமும் விலை உயர்ந்திருக்கிறது. நேற்றைய விட இன்று 24 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 27 ரூபாய் விலை உயர்ந்து 12,573 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 216 ரூபாய் விலை உயர்ந்து 1,00, 584 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் 9,525 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்து 76,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை: தங்கத்தின் விலை உயர்வு தான் தலைசுற்ற வைக்கிறது என்றால் தங்கத்தை விட வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்து வருகிறது . இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 195 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ஐந்தாயிரம் ரூபாய் விலை உயர்ந்து 1,95,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று 161 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்றைய தினம் 195 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஒன்றாம் தேதியிலிருந்து இன்று வரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 34 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது.
More From GoodReturns

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?



Click it and Unblock the Notifications