நேத்து பார்த்த விலை இன்னைக்கு இல்லை... காலையில பார்த்த விலை சாயந்தரம் இல்லை.. அந்த அளவுக்கு தங்கம் விலையானது தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. ஒரு பவுன் ஒரு லட்சம் என்பது கூட இப்போது பழைய கதையாகி விட்டது. இப்போ 10 கிராம் தங்கத்தின் விலை 1.6 லட்சத்தை கடந்து ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.
சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் என்பது எட்டாக் கனியாக மாறுகிறதா? நகைக்கடை பக்கம் போகவே யோசிக்க வைக்கும் இந்த தாறுமாறு விலை உயர்வுக்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணங்கள் என்ன? இது வெறும் ஆரம்பம்தானா அல்லது இனி விலை குறையுமா? முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அந்த 5 முக்கிய காரணிகளை பற்றித்தான் இந்த பதிவில் அலசப் போகிறோம்.

விலைமதிப்பற்ற உலோகங்களின் வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ஒரு எழுச்சியாக, தங்கம் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 5,000 டாலர் (10 கிராம் ரூ. 1.58 லட்சம்) என்ற மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியும் தனது அதிரடிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. 2025-ல் வெள்ளி காட்டிய வலுவான வளர்ச்சியைத் தொடர்ந்து, தற்போது ஒரு அவுன்ஸ் 109 டாலருக்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது.
முக்கிய மைல்கல்லை எட்டிய தங்கம்!
உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக, இந்த உலோகங்களின் மொத்த சந்தை மதிப்பு, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின்) மதிப்பிற்கு இணையாக உயர்ந்துள்ளது. சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸூக்கு 5,092.71 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள தங்கம், தற்போது 5,086 டாலருக்கு அருகில் காணப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் வரி விதிப்பு பதற்றம், கிரீன்லாந்து விவரகாரம், இதன் விளைவாக டாலரில் ஏற்படும் ஏற்ற இறக்கம், பங்குச் சந்தைகளில் காணப்படும் களோபரம் என பலவும், முதலீட்டாளர்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வழிவகுத்துள்ளன.
இனி என்னவாகும்?
மூச்சுமுட்ட வைக்கும் இந்த விலை உயர்வு இத்துடன் முடிந்துவிட்டதா என்றால் நிச்சயம் இல்லை. இது இன்னும் ஏற்றம் காணலாமோ என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து உலகளாவிய கடன் நெருக்கடி என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என கூறும் நிபுணர்கள், கட்டுபாடற்ற கடன்களைச் சமாளிக்க அரசாங்கங்கள் பணவீக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடும். அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைவது, தங்கத்தின் விலையேற்றத்தை இன்னும் வேகப்படுத்தும். டாலர் அல்லாத மற்ற நாணயங்களை வைத்திருப்பவர்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதால், இது தங்கத்தின் மீதான மோகத்தை இன்னும் அதிகரிக்கும். இது மேலும் விலையேற்றத்திற்கே வழிவகுக்கும். ஏற்கனவே பேங்க் ஆப் அமெரிக்கா அவுன்ஸ் தங்கம் விலையானது 2026ல் 6000 டாலர்களை தொடும் என்று கணித்துள்ளது. இதேபோல ஜேபி மார்கனும் நீண்ட கால அடிப்படையில் 6,000 டாலர்களை எட்டலாம் என்றும் கணித்துள்ளது. இந்த இலக்கு விலையானது மத்திய வங்கிகளின் தேவை, பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் வாங்கும் தேவையும் உயரும். இது விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications