தங்கம், பிட்காயின், பங்குச்சந்தை, பத்திரம் எல்லாமே சரிவு.. முதலீட்டாளர்கள் எடுத்த ஓரே முடிவு..!!

முதலீட்டுச் சந்தையில் மிகவும் அரிதாக நடக்கும் சம்பவம் இது, உலகளவில் தற்போது பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி, பத்திரங்கள் (Bonds), கச்சா எண்ணெய் என அனைத்து முக்கிய முதலீடுகளும் சரிந்து வருகிறது.

பொதுவாக முதலீட்டாளர்கள் ஒரு முதலீட்டில் சரிவு ஏற்பட்டால், அதை விற்றுவிட்டு, மற்றொரு முதலீட்டுக்குப் பணத்தை மாற்றுவார்கள். ஆனால் தற்போது அனைத்து முதலீடுகளும் ஒரே நேரத்தில் சரிவது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

தங்கம், பிட்காயின், பங்குச்சந்தை, பத்திரம் எல்லாமே சரிவு.. முதலீட்டாளர்கள் எடுத்த ஓரே முடிவு..!!

இத்தகைய விசித்திரமான சூழ்நிலையில் கவனிக்க வேண்டிய ஒன்று தான், அதிகளவிலான பணம் எங்கே செல்கிறது என்பதைக் கவனிப்பது தான். முதலீட்டுச் சந்தையில் ரீடைல் முதலீட்டாளர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் சந்தையின் போக்கைத் தீர்மானிப்பது பெரிய முதலீட்டாளர்கள் தான்.

இந்த நிலையில் பெரும் முதலீட்டாளர்கள் தற்போது புதிதாக முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதைக் காட்டிலும் தங்களுடைய முதலீட்டைப் பாதுகாப்பது தான் மிகவும் முக்கியம் என முடிவு செய்துள்ளனர்.

இதனால் தற்போது செய்துள்ள முதலீடுகளில் எதெல்லாம் சரிகிறதோ அதனை விற்பனை செய்துவதை அடிப்படை பணியாக வைத்துள்ளனர். உதாரணமாகப் பங்குகள், தங்கம், கிரிப்டோ உள்ளிட்ட முதலீடுகளை விற்றுவிட்டு அனைத்தையும் பணமாக அதாவது ரொக்கமாக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இது தான் மிகவும் முக்கியமான தருணம், முதலீட்டு சந்தையில் இருந்து பணம் வெளியேறிவிட்டால் திரும்பவும் வராது என்பது அர்த்தம் அல்ல, பெரும் முதலீட்டாளர்கள் மொத்தமாகப் பெரிய வாய்ப்புக்காகப் பணத்தைச் சேர்த்து வைக்கிறார்கள் என்பது பொருள்.

சந்தையில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது மீண்டும் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாரிக்கொண்டு இருப்பதைத் தான் இந்த செயல்பாடுகள் காட்டுகிறது. பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி ஆகியவை கடந்த 2-3 மாதத்தில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது, இது முதலீட்டுச் சந்தையில் எதிர்பார்க்காத ஒன்று.

தற்போது மொத்த முதலீட்டு சந்தையைத் தீர்மானிப்பது பணவீக்க அளவீடுகளும், பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித முடிவுகளும் தான். இவை இரண்டையும் நம்பி தான் முதலீட்டு சந்தை சுழன்று வருகிறது, பெட் வட்டியை உயர்த்துமா என்பதில் சிறிய சந்தேகம் இருக்கும் காரணத்தால் அமெரிக்கப் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் கூட சிறியளவிலான தடுமாற்றத்துடன் சரிவில் உள்ளது.

இதனால் தற்போது முதலீட்டாளர்களுக்கு காத்திருப்பதும், பணத்தைக் கையில் வைத்திருப்பதும் முக்கியமானதாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+