அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான அடுத்த கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், அனைவருக்கும் பிடித்தமான ஆபரணம் மற்றும் பாதுகாப்பு புகலிடமாக விளங்குகிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பு புகலிடத்தினை வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பு தான்.
அதிலும் இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தினால், பேப்பர் தங்கங்களில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்.
அரசின் பாதுகாப்பான திட்டம்
இப்படி பற்பல சாதகமான விஷயங்களுக்கு மத்தியில் தங்கத்தில், அதுவும் அரசின் ஒரு திட்டத்தில் முதலீடு என்றால் கசக்கவா செய்யும். அதிலும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், அவற்றை ஆபரணமாக வாங்காமல், விலையேற்றத்திற்கு தகுந்தவாறு லாபம், வட்டி விகிதம் என, வரிச் சலுகைகளுடன் லாபம் கிடைக்கிறது என்றால் வேண்டாம் என்று கூற முடியுமா? வாருங்கள் எப்போது முதல் கொண்டு முதலீடு செய்யலாம். விலை நிலவரம் என்ன? மற்ற விவரங்கள் என்ன? பார்க்கலாம்.
கவர்ச்சிகரமான முதலீடு
இந்த திட்டம் ஆரம்பத்தில், பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, அரசு அறிவித்த ஒரு பாதுகாப்பான திட்டமாக இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இதனால் தற்போது சிறந்த, ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
நல்ல லாபம் கிடைக்கலாம்
தங்கத்தில் முதலீடு செய்தே ஆக வேண்டும் என்பவர்களுக்கு, இது சரியான திட்டம் என்றே கூறலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தற்போது பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் பணவீக்கத்திற்கு சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த நேரத்தில் அரசின் இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு நல்ல ஆப்சன் தான். இது நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்க வழிவகுக்கும்.
சிறந்த முதலீடு
சர்வதேச சந்தையானாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகமானாலும் தங்கம் விலையானது நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வரும் நிலையில், குறைந்த விலையில் முதலீட்டாளர்களை தங்கத்தினை வாங்க தூண்டும், இது தங்கத்திற்கு ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் ஆர்பிஐ தங்க பத்திர விற்பனையானது மார்ச் 1 அன்று தொடங்கவுள்ளது. இந்த முதலீட்டு திட்டமானது தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு, ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகவே பார்க்கப்படுகிறது.
கடைசி தேதி என்ன?
12ம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை வாங்க கடைசி தேதி மார்ச் 5, 2021 ஆகும். அதன் பிறகு மார்ச் 9, 2021 இதன் வெளியீட்டு தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் உண்டு.
எவ்வளவு விலை?
இந்த தங்க பத்திர விற்பனையில் கிராமுக்கு 4,662 ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இதே ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்று 4,612 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
எவ்வளவு முதலீடு?
பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிணையமாக கடன் பெறலாமா?
இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன. இதனால் மக்களின் நம்பிக்கையின் சின்னமாக உள்ளது.
எவ்வளவு வட்டி?
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ்
தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், கேபிட்டல் டேக்ஸ் இருக்காது. ஒரு வேளை உங்களால் எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications