நடப்பு ஆண்டில் அரசின் தங்க பத்திரங்களை வாங்குவதற்கான இரண்டாவது கட்ட அறிவிப்பினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், நம் உணர்வுகளில் கலந்துள்ள, பலருக்கும் பிடித்தமான முதலீடுகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக நம் உணர்வுகளில் கலந்துள்ள, அந்தஸ்தின் அடையாள சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தங்கத்தில் ஆர்வம்
இன்றைய காலகட்டத்தில் தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தினால், நம் மக்கள் தங்களது முதலீடுகளிலும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதோடு பிசிகல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி சேதாரம் என்ற செலவினங்கள் உள்ள நிலையில், அதனை டிஜிட்டல் தங்கங்களாக வாங்க தொடங்கியுள்ளனர். அது வெறுமனே தங்கமாக அல்லாமல், பேப்பர் தங்களாக வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இறையாண்மை தன்மை கொண்டது
நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றே பல நிபுணர்களும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் டிஜிட்டல் தங்கத்தினை ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாக முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். அதுவும் அது ரிசர்வ் வங்கியின் திட்டம் என்பதால் இறையாண்மை தன்மை கொண்டதாகவும் உள்ளது.
சிறந்த முதலீட்டு ஆப்சன்
ஆரம்பத்தில் இந்த தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, அரசு அறிவித்த ஒரு சிறப்பு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு புகலிடம்
ஆக தங்கத்தின் மீது ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களுக்கு, இது சரியான திட்டம் என்றே கூறலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற உணர்வே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Array
ஆக இந்த நேரத்தில் அரசின் இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு நல்ல ஆப்சன் தான். இதன் மூலம் நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்கலாம்.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இரண்டாம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரம் மே 24 முதல் விற்பனை செய்யப்படும். இதனை வாங்க கடைசி தேதி மே 28, 2021 ஆகும். அதன் பிறகு ஜூன் 1, 2021 அன்று இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது,
விலை எவ்வளவு?
இரண்டாம் கட்ட தங்க பத்திர விற்பனையானது நாளை தொடங்கவுள்ள நிலையில், அதன் விலையானது கிராமுக்கு 4,842 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். அவர்களுக்கு கிராம் 4,792 ரூபாய்க்கு கிடைக்கும். அதோடு கொரோனா காலகட்டத்தில் வெளியில் செல்லாமல், இணையத்தின் மூலமாக இருந்தே இடத்தில் இருந்தே வாங்க முடியும்.
எவ்வளவு வாங்கலாம்?
பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிணையமாக வைத்து கடன் வாங்கலாம்
அரசின் இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன.
வட்டி எவ்வளவு?
அரசின் தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கும் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
கேபிட்டல் டேக்ஸ் உண்டு
தங்க பத்திரத்தில் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி இல்லை. ஒரு வேளை உங்களால் எட்டு வருடம் வரை நீடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
அடுத்த சீரிஸ் எப்போது?
சீரிஸ் 3
சந்தா தேதி மே 31 - ஜூன் 4, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜூன் 8, 2021
சீரிஸ் 4
சந்தா தேதி ஜூலை 12 - ஜூலை 16, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஜூலை 20, 2021
சீரிஸ் 5
சந்தா தேதி ஆகஸ்ட் 09 - ஆகஸ்ட் 13, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி ஆகஸ்ட் 17, 2021
சீரிஸ் 6
சந்தா தேதி ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 03, 2021, பத்திரம் வழங்கும் வழங்கும் தேதி செப்டம்பர் 07, 2021
பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்படும் அரசின் தங்க பத்திரங்கள், நல்ல லாபத்தினையும், வட்டியுடன் பெறலாம். ஆக உண்மையில் இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?



Click it and Unblock the Notifications