தங்கம் ஒரு விலைமதிப்பற்ற உலோகமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் முதலீடு என்பதைத் தாண்டி கௌரவத்தின் அடையாளமாக இருக்கிறது. இதன்மூலம், உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோராகவும் இந்தியா வளர்ந்து வருகிறது. இருப்பினும், இந்தியாவும் தங்கம் உட்பட மிகப்பெரிய கனிம வளங்களைக் கொண்ட நாடாக கருதப்படுகிறது. அதாவது, இந்தியாவில் தங்கச் சுரங்கத்திற்கான பெரும் வாய்ப்புகள் இன்றும் உள்ளது.
முந்தைய காலங்களில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அல்லது புதையுண்ட தங்க புதையல்கள், நிலத்தை தோண்டும்போது கிடைப்பது வழக்கம். அந்தவகையில் தற்போது தமிழகத்தின் திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் விஜயகுமார், திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. செல்போன் பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் லித்தியம் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அந்த ஆய்வின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். தமிழ்நாட்டில் நிலத்துக்கு அடியில் சுண்ணாம்புக் கற்கள் அதிகம் உள்ளன. கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, பேட்டரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டது. எனவே, தங்கம் மற்றும் லித்தியம் இருப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகிலேயே தமிழ்நாட்டு பெண்கள்தான் அதிக தங்கத்தை வைத்திருக்கிறார்கள் என்றும், தமிழக பெண்களிடம் 6,720 டன் தங்கம் இருப்பதாக கடந்த டிசம்பரில் சர்வதேச கோல்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்தது. இதேபோல், இந்திய பெண்கள் மொத்தமாக 24,000 டன் தங்கத்தை ஆபரணங்கள் வடிவில் வைத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், தமிழகத்தில் தற்போது பூமிக்கடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக வெளியான செய்தியால் மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!



Click it and Unblock the Notifications