தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில் மக்களால் தங்கத்தை வாங்காமல் இருக்க முடியவில்லை, காரணம் இந்திய மக்கள் காலம் காலமாக தங்கத்தை முக்கிய சொத்தாக பார்த்து வருகின்றனர். இதேவேளையில் மக்களின் ஆர்வத்தை நகை கடைகளும் பணமாக்க அதிரடியான முடிவுகளையும், புதுமைகளையும் கொண்டு வருகிறது.
இன்றைய சூழ்நிலையில் தங்கம் வாங்குவோர் பலர் பார்களாகவும், காயின்களாகவும் வாங்க துவங்கியிருந்தாலும், இது வெறும் சிறு எண்ணிக்கை மட்டுமே. பெரும் பகுதி மக்கள் தொடர்ந்து தங்க நகைகளாக தான் வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கும் மக்கள் தங்கத்தின் அதீத விலை காரணமாக தூய்மை குறைவாக அதாவது 18 கேரட், 14 கேரட் அளவில் தங்க நகைகளை வாங்க துங்கியுள்ளனர். இதை கவனித்த மத்திய அரசு 9 கேரட் நகைகளை சந்தையில் கொண்டு வர கதவுகளை திறந்துள்ளது.

இந்திய தர அமைப்பான BIS (Bureau of Indian Standards) 9 காரட் தங்க நகைகளுக்கு இனி அனைத்து தயாரிப்பாளர்களும், நகை கடைகளும் கட்டாயமாக ஹல்மார்க் முத்திரை உடன் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி இந்தியா முழுவதும் 9 கேரட் தங்கத்திற்கு hallmarking கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறை ஜூலை 2025 முதல் அமலுக்கு வரும் எனவும் BIS தெரிவித்துள்ளது.
BIS அமைப்பு கட்டாய ஹால்மார்க் பிரிவில் 9 கேரட் நகைகளை சேர்த்த நிலையில், இனி ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பட்டியலில் 24KF, 24KS, 23K, 22K, 20K, 18K, 14K உடன் தற்போது 9K சேர்க்கப்பட்டு உள்ளது. 9 கேரட் என்பால் 1000 கிராமில் 375 மட்டுமே தங்கம் இருக்கும். இந்த மாற்றம் 9 காரட் தங்கத்திலும் இனி தர நிர்ணயம் செய்யப்படும்.
மேலும் அகில இந்திய ரத்தினகல் மற்றும் நகை கவுன்சில் தனது X பதிவில், இனி இந்தியாவில் இருக்கும் அனைத்து தங்க நகை வணிகர்கள் மற்றும் ஹால்மார்க்கிங் மையங்கள் 9 கேரட் நகைகளுக்கும் BIS விதிமுறைகளின் கீழ் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
"9 காரட் தங்கம் (375 ppt) இப்போது BIS திருத்தம் எண் 2-ன் படி கட்டாய முத்திரைக்கு உட்பட்டுள்ளது. அனைத்து வணிகர்களும் முத்திரை மையங்களும் இதை பின்பற்ற வேண்டும்" என்று கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் வணிகர்களுக்கு ஒரு புதிய சவாலை உருவாக்கலாம், ஆனால் மக்களுக்கு தங்கள் வாங்கிய தங்கத்தின் தூய்மையை உறுதி செய்ய உதவும் ஒரு பெரிய படியாக அமையும்.


Click it and Unblock the Notifications