தமிழ்நாட்டில் இன்று ஒருவழியாக தங்கம் விலை ஆனது சரிந்துள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. அதுவும் கடந்த பிப்ரவரி 6 முதலே விடாமல் விலை ஏறிகொண்டே சென்றது. இந்த நிலையில், தங்கத்தின் மீதான ஆர்வம் கொண்ட மக்கள் அனைவரும் தங்கம் விலை எப்போது குறையும் என்ற ஆர்வத்துடன் காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில், இன்று தங்கம் மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளது.இது நகை வாங்குவோரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.8060 ஆக இருந்தது. அதுவே இன்று ஒரு கிராம் 120 ரூபாய் சரிந்து 22 கேரட் தங்கம் ரு.7940 ஆக சரிந்துள்ளது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கமும் நேற்று ரூ.8,792-க்கு விற்கப்பட்டது. இன்று 131 ரூபாய் சரிந்து 8,661 ரூபாயாக விற்பனையாகிறது.

நேற்றைய (11/02/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8060 க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.63,480-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,600-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,661-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.70,336-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 86,610-க்கும் விற்பனையானது.
இன்றைய (12/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 120 ரூபாய் சரிந்து ரூ.7940-க்கும் அதேபோல், 1 சவரன் 22 கேரட் தங்கம் 960 ரூபாய் சரிந்து ரூ. 63,520-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,400-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் 131 ரூபாய் சரிந்து ரூ.8,661-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் 1048 ரூபாய் சரிந்து ரூ.69,288-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.86,610-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,611-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,888-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.66,110-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையை பொருத்தவரையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி முதலே மாறாமல் நிலையாக உள்ளது. அதன்படி, கடந்த 8 நாட்களாகவே ஒரு கிராம் வெள்ளி ரூ.107 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. மேலும், 1கிலோ ரூ.1,07,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது


Click it and Unblock the Notifications