சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை மாறாமல் உள்ளது. இரண்டாவது நாளாக தங்கம் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படாததால் நகை வாங்குவோர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். புத்தாண்டு 2025ஆம் ஆண்டு தொடங்கி இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில், முதல் வாரத்தில் விலையேற்றத்தை சந்தித்து வந்த தங்கம் ஆனது, இந்த வாரத்தில் முதல் நாளில் விலை மாறாமல் உள்ளது. மேலும், தங்கம் வாங்குபவர்களுக்கு நிம்மதியை அளிக்கும் வகையில் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை சீராக உள்ளது. உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாகவும், இதுவும் விலை குறைவதற்கு காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 4ஆம் தேதியான நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்தது. ஆனால் ஜனவரி 5ஆம் தேதி நேற்றும், ஜனவரி 6ஆம் தேதி இன்றும் விலை மாறவில்லை. எனவே, இன்றும் 1 கிராம் 22 கேரட் தங்கம் அதேவிலையான ரூ.7,215-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,871-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,215-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,720-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.72,150-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,871-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,968-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 78,710-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,960-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,680-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: இதற்கிடையில் வெள்ளியின் விலையை பொருத்தவரையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று வெள்ளி விலை கிராம் 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ. 90,000-த்திற்க்கு விற்கப்படுகிறது. புத்தாண்டு தொடங்கிய கடந்த 6 நாட்களில் வெள்ளி விலை ஆனது ஒரு நாள் மட்டுமே விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது. மற்ற நாட்களில் அதே விலையில் நீடிக்கிறது.
More From GoodReturns

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications