பொங்கல் பண்டிகை ஆனது இன்று தொடங்கியது. ஜனவரி 14ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியமான இந்த பொங்கல் பண்டிகை நாளை முதல் மூன்று நாட்களுக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அதை தொடர்ந்து மாட்டுபொங்கல் அடுத்த நாள் காணும் பொங்கல் என தொடர்ச்சியாக பண்டிகைகள் நடக்க உள்ளன. இதற்கிடையில், தங்கம் வாங்குவோருக்கு இன்று இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.
ஜனவரி 14 ஆம் தேதியான நிலவரப்படி தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் விலை ஆனது ரூ.10 சரிந்து ரூ. 7330-க்கும் 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11 குறைந்த ரூ. 7996-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,640 ஆகவும், 24 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.63,968 ஆக உள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: தங்கத்தின் விலையை பொறுத்தவரை மாவட்டங்கள் வாரியாக கோயம்புத்தூர், சென்னை, திருச்சி மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,340-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று ரூ.7,330க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.58,720 ஆக விற்பனையான நிலையில் இன்று, ரூ.58,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.73,340 விற்பனையான நிலையில் ரூ.250 அதிகரித்து ரூ.73,330 விற்பனையாகிறது.
அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8007 விற்பனையான நிலையில், இன்று ரூ.7996-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 64,056விற்பனையாக நிலையில் இன்று ரூ.63,968 க்கும் விற்கப்படுகிறது. 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 80,070-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,051-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 48,408-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 60,510-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியை பொறுத்தவரை, தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி மீது ஆர்வம் வைத்திருந்தால், இன்று அவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பாக இருக்கும். அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து கிராமுக்கு ரூ.100 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,00,000 ஆகவும் விற்பனையாகிறது.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications