தங்கம் என்பது எவராலும் மறுக்கமுடியாத ஒன்றாகும். இளம் தலைமுறைகள் தாண்டி எல்லோராலும் அதிகம் நேசிக்கப்படும் ஒரு பொருள். தங்கம் என்றாலே அனைவருக்கும் ஆசையை தூண்டும். இன்றைய காலகட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைக்கடைகள் உள்ளன. முன்பெல்லாம் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்கப்பட்டது. ஆனால், இன்றெல்லாம் அப்படியில்லை நினைத்தால் தங்கம் வாங்க சென்றுவிடுகின்றனர். எனவே தங்கம் விலை அதிகரித்தாலும் கவலையில்லை.
அந்த வகையில்தான், கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக நகை வாங்குபவர்களால் நகை வாங்குவதில் அதிகம் விரும்பப்பட்ட தங்கத்தில் 18 கிராம் வகை இடம்பிடித்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சுமார் 25% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதாவது புதிதாக தங்கம் வாங்குவோர்கள் ரோஜா டிசைன் எனப்படும் தங்கம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட வெள்ளை தங்கம் டிசைன் போன்ற லைட் வெயிட் மற்றும் பாரம்பரியமான டிசைன் கொண்ட தங்கத்தை தேர்வு செய்கின்றனர். இது இந்தியர்கள் அதிகம் வாங்கும் 22-காரட் தங்கத்திற்கான விருப்பத்தை காட்டிலும் இளம் நகை வாங்குபவர்களுக்கு ஆர்வத்தை குறைத்துள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே தற்போதைய குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
வியாழக்கிழமையான ஜனவரி 9 நிலவரப்படி, 18 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.59,660 ஆகவும், 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.72,260 ஆகவும் விற்பனையாகிறது.
18- மற்றும் 22-காரட் வகைகள் தங்கத்தின் தூய்மை பற்றிய கவலைகளை தாண்டி ஹால்மார்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் தனித்துவ அடையாளம், ஆறு எழுத்துகள் கொண்ட எண்ணெழுத்து குறியீடு, தங்க நகைகளை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் வழங்கப்படுகிறது .
2024 ஆம் ஆண்டில், இந்தியர்கள் 225 டன்கள் 18 காரட் தங்கத்தை வாங்கியுள்ளனர். இது 2023 ஆம் ஆண்டை விட 25% அதிகமாகும். இதற்கு முன்பு 18 காரட் நகைகளுக்கான தேவை 5-10% அதிகமாக இருந்ததால் இந்த ஏற்றம் அதிகரித்துள்ளது என்று ராஜேஷ் ரோக்டே, அகில இந்திய ஜெம் & ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் தலைவர் கூறியுள்ளார்.
அதேபோல், நாட்டில் 22 காரட் தங்கத்தின் மொத்த பயன்பாடு ஆண்டுதோறும் 500-550 டன்கள் வரை மாற்றம் காணப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் பயன்பாடு 2023 இல் 180 டன்னாகவும், 2022 இல் 162 டன்னாகவும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறைந்த காரட்டேஜ், வலுவான நகைகள் எனவே, நகைக்கடைக்காரர்கள் புதிய மற்றும் நவீன வடிவமைப்புகளை பரிசோதித்து வருகின்றனர். அவை இளைய தலைமுறையினரால் உடனடியாக வாங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
ஜாய் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குனர் வர்கீஸ் ஆலுக்காஸ் கூறுகையில், தங்களது கடைகளில் 18 காரட் நகைகளுக்கு 15-20% தேவை அதிகரித்துள்ளது. இவை வாங்குபவர்கள் முக்கியமாக இளைஞர்கள் என்று கூறியுள்ளார்.
அதேபோல், பிஎன்ஜி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் கூறுகையில், 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் 18 காரட் தங்க நகைகளுக்கான தேவை 15-18% வளர்ச்சி கண்டுள்ளது. அதற்குக் காரணம் 25 வயதுக்குட்பட்ட இளம் வாடிக்கையாளர்கள் என்று கூறியுள்ளார்.
பல நகைக்கடைக்காரர்கள் 14 காரட் மற்றும் 9 காரட் தங்கத்திலும் தங்க நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தியா புல்லியன் & ஜூவல்லர்ஸ் அசோசியேஷன், 9 காரட் நகைகளில் ஹால்மார்க்கிங்கை அறிமுகப்படுத்தக் கோரி, இந்திய தரநிலைகளுக்கான பணியகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications