தங்கம் விலை ஆனது சமீப நாட்களாக கடுமையாக உயர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. சுப காரியங்கள் செய்பவர்கள், முதலீடு செய்பவர்கள் என பலரும் தங்கத்தின் மீது ஆர்வத்தை செலுத்தி வரும் வேளையில் அவர்களால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வாங்க முடிகிறது. எனெனில் அந்த நாளில் மட்டும் தங்கம் விலை குறைந்திருக்கும். மாறாக தங்கம் விலை அதிகரிக்கும் வேளையில் அந்த நாளில் யாரும் தங்கத்தை வாங்க விரும்பமாட்டார்கள். அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலை ஆனது கடுமையாக உயர்ந்துள்ளது.
வரும் நாட்களில் சுபமூகூர்த்த தினங்கள் வரிசையாக வரவுள்ளது. இந்த சமயத்தில் தங்கம் விலை ஆனது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால் தங்கம் வாங்குவோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று சவரனுக்கு 22 காரட் தங்கம் ஆனது சுமார் 760 ரூபாய் வரை உயர்ந்தது.

அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7,810 ஆக இருந்தது. இதற்கிடையில், இன்று அதில் 95 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,905-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.103 அதிகரித்து ரூ.8,623-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய (04/02/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,810 க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.62,480-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.78,100-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,520-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.68,160-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 85,200-க்கும் விற்பனையானது.
இன்றைய (05/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.95 அதிகரித்து ரூ.7,905-க்கும் அதேபோல், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.760 அதிகரித்து ரூ. 63,240-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,050-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.113 அதிகரித்து ரூ. 8,623-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.824 அதிகரித்து ரூ.68,984-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.86,230 -க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,456-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 51,648-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.64,560-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையை பொருத்தவரையில் இன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று விற்பனையான ஒரு கிராம் வெள்ளி ரூ.106 ஆக இருந்த வெள்ளி விலை இன்று ரூ.107 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், 1கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ.1,07,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது


Click it and Unblock the Notifications