பொங்கல் பண்டிகை நாளை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரியமான இந்த பொங்கல் பண்டிகை நாளை முதல் மூன்று நாட்களுக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அதை தொடர்ந்து மாட்டுபொங்கல் அடுத்த நாள் காணும் பொங்கல் என தொடர்ச்சியாக பண்டிகைகள் நடக்க உள்ளன. இதற்கிடையில், தங்கம் வாங்குவோருக்கு இன்று பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 வரை உயர்ந்துள்ளது.
ஜனவரி 13 ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் விலை ஆனது ரூ.25 அதிகரித்து ரூ. 7340-க்கும் 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8007-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.58,720 ஆகவும், 24 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.64,056 ஆகவும் உள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: தங்கத்தின் விலையை பொறுத்தவரை மாவட்டங்கள் வாரியாக கோயம்புத்தூர், சென்னை, திருச்சி மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,315-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று ரூ.7,340க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.58,520 ஆக விற்பனையான நிலையில் இன்று, ரூ.58,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.73,150 விற்பனையான நிலையில் ரூ.250 அதிகரித்து ரூ.73,400 விற்பனையாகிறது.
அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,980 விற்பனையான நிலையில், இன்று ரூ.8007-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 63,840 விற்பனையாக நிலையில் இன்று ரூ. 64056- க்கும் விற்கப்படுகிறது. 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 80,070-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,990-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 47,925-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,900-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியை பொறுத்தவரை, இன்று 1ரூபாய் அதிகரித்து கிராமுக்கு ரூ.102 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,02,000 ஆகவும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications