கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் சரிந்து வரும் தங்கத்தின் விலையால் பொதுமக்கள் நிம்மதிடைந்துள்ளனர். இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்றும் விலை குறைந்துள்ளதால் இன்று நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை நிலவரம்- 22காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.71,840 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,955 ஆகவும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று ஜூலை 9 ஆம் தேதி தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.8,955-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.71,640-க்கு விற்பனையாகிறது.

24 காரட் தங்கம்: அதேபோல், 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.28 சரிந்து ரூ.9,769 ஆக விற்பனையானது. ஒரு சவரன் ரூ.224 சரிந்து ரூ.78,152 ஆகவும் விற்பனை செய்யப்ப்டுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தை பொறுத்தவரையில், அதன் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. 18 காரட் தங்கம் என்பது 75% தூய தங்கத்தையும், மீதமுள்ள 25% மற்ற உலோகக் கலவையையும் கொண்டது. இது ஆபரணங்கள் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இன்று ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.7,365-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.58,920-க்கும் விற்பனையாகிறது. இந்தத் தொடர் விலை சரிவு தங்கத்தை வாங்கும் மக்களிடையே மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக இருந்தாலும், முதலீடு செய்பவர்களுக்கு ஒரு சிறிய பின்னடைவாக இருக்கும்.
வெள்ளி விலை நிலவரம் : வெள்ளியை பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. அதன்படி நேற்றைய விலையை விட வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.118-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற காரணிகள் தங்கத்தின் விலையைத் தொடர்ந்து பாதித்து வருகின்றன. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுப் புகலிடமாகத் தங்கத்தை நாடுவதே இந்தத் தொடர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த விலை உயர்வு தொடருமா அல்லது ஒரு திருத்தம் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications