தங்கம் விலை செம ஷாக்.. ஒரு கிராம் 11 ஆயிரம் தாண்டியது..!

தங்கம் என்பது இனி வரும் காலங்களில் வெறும் கனவாகதான் இருக்கும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் தங்கத்தின் விலை, இன்று (அக்டோபர் 6, 2025) கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதல் விலை மாறாமல் இருந்த தங்கம் இன்று வாரத்தின் முதல் நாளே பேரதிர்ச்சியை கொடுத்து நகை வாங்குவோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இன்று ஒரே நாளில் சவரனுக்கு 22 காரட் தங்கம் ரூ.125 உயர்ந்து ரூ.11,070 ஆக உள்ளது. இது தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் மற்றும் நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் தங்கம் விரைவில் ரூ.15000 எட்டும் என்ற நிலையைத் தாண்டி விற்பனையாவது, சந்தையில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தங்கம் விலை செம ஷாக்.. ஒரு கிராம் 11 ஆயிரம் தாண்டியது..!

இன்றைய தங்கம் விலை நிலவரம் (அக்டோபர் 6, 2025): நேற்று 22 காரட் ஒரு கிராம் ரூ.10,945 ஆக இருந்த தங்கம் இன்று ரூ.125 உயர்ந்து ரூ.11,070 ஆக விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் நேற்று , 87, 560 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1000 உயர்ந்து ரூ.88,560 ஆக விற்பனையாகிறது. இன்று விலை குறையும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக விலை மேலும் உயர்ந்துள்ளது.

24 காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் ரூ.95,520 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,096 உயர்ந்து ரூ.96,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,940 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.137 உயர்ந்து ரூ.12,077-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம்: நேற்று ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.8955 ஆக இருந்த நிலையில், ரூ.103 உயர்ந்து ரூ.9058 ஆக உள்ளது. அதேபோல், ஒரு சவரன் நேற்று ரூ.71,640 ஆக இருந்த நிலையில், ரூ.824 அதிகரித்து ரூ.72,464 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று விற்பனையான கிராம் ரூ.165 ஆனது இன்று ரூ.1 அதிகரித்து ரூ.166 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ.1,66,000 ஆக விற்பனையாகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+