ஈரான் போர் தொடர்பான நிகழ்வுகளும் மத்திய அரசு வெளியிடக்கூடிய வரி சார்ந்த அறிவிப்புகளும் தான் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஈரான் போர் தீவிரம் அடையும் சூழல் ஏற்படும் போது தங்கம், வெள்ளியின் விலை குறைகிறது. போர் தணியும் சூழல் உண்டானால் விலை உயர்கிறது.
மத்திய அரசு அண்மையில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதன் மூலம் மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துக் கொள்வார்கள் என மத்திய அரசு எதிர்பார்த்தது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 இலிருந்து 15 சதவீதமாக உயர்த்திய அந்த ஒரு நாளில் தங்கத்தின் விலை உயர்ந்தது ஆனால் அதன் பிறகு தொடர்ந்து விலை சரிவிலேயே இருந்து வருகிறது.

இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 14,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,18,000 ரூபாய்க்கும்10 கிராம் ஆபரண தங்கம் 1,47, 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மட்டுமல்ல கோவை, மதுரையிலும் தங்கம் இதே விலைக்கு தான் விற்கப்படுகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் 16,091 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,28,728 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,310 ரூபாய்க்கும் ஒரு சவரன் 98, 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மே 12, 13, 14 என கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களில் விலை சரிவை கண்டது. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை நேற்று விலை மாற்றம் இல்லை. வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கத்தின் விலையில் எந்த ஒரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.
வெள்ளி பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கு ஒரு கிலோ வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் பார்க்கும் போது 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1,58,880 ரூபாய் என இன்றைய தினம் உயர்வு கண்டது வெள்ளியின் விலை பொருத்தவரை எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 2,73, 750 ரூபாய் என விலை உயர்வு கண்டது.
சில்லறை விற்பனையில் தங்கம், வெள்ளி விலை மாறவில்லை ஆனால் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் உயர்ந்துள்ளது. எனவே இனி வரும் நாட்களில் சில்லறை விற்பனையிலும் விலை உயர் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

