இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படும் தங்கம் மூலம் நாட்டின் வெளிநாட்டு நாணய சேமிப்பு குறைவது மட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தக பற்றாக்குறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் மத்திய அரசு சில முக்கிய பொருட்கள் மீதான வரி சலுகையை மொத்தமாக கட் செய்ய முடிவு செய்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட ஃபைண்டிங்க்ஸ் (findings), தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்கள், மற்றும் தங்கத்தை சுத்திகரிக்க பயன்படும் spent catalysts ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்துவதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த 3 பொருட்களின் நேரடியாக மக்களை பாதிக்கும் விஷயம் தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்கள் மீதான இறக்குமதி வரி தான். இதர இரண்டு பொருட்கள் மீதான வரி உயர்வு மறைமுகமாக மக்களை பாதிக்கிறது.
தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட ஃபைண்டிங்க்ஸ் (findings) மற்றும் நாணயங்கள் மீதான புதிய இறக்குமதி வரி விகிதம் 15% ஆகும். இதில் அடிப்படை சுங்க வரி (BCD) 10% மற்றும் கூடுதலாக 5% AIDC எனப்படும் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் ஆகியவை அடக்கம். இந்த வரி உயர்வில் சமூக நல கூடுதல் கட்டணத்திற்கு (SWS) விலக்குக்கு பொருந்தாது.
மேலும் தங்கத்தை சுத்திகரிக்க பயன்படும் spent catalysts இறக்குமதி வரி வரி விகிதம் 14.35% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் 10% அடிப்படை சுங்க வரி (BCD) மற்றும் 4.35% AIDC எனப்படும் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் அடங்கும். இந்த வரி உயர்வில் சமூக நல கூடுதல் கட்டணத்திற்கு (SWS) வரி விலக்கு பொருந்தாது.
இந்த புதிய வரி மாற்றம் ஜனவரி 22,2024 முதல் அமலாக்கம் செய்யப்படும், இதனால் இன்று காலை முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் புதிய வரி பொருந்தும்.
தங்கம் மற்றும் வெள்ளி ஃபைண்டிங்க்ஸ் என்பது தங்கம் வெள்ளி நகைகளை இணைக்கும் பொருட்கள். உதாரணமாக ஹூக், கிளம்ப், பின், ஸ்கூரு, இப்படி நகைகளை இணைக்க பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் ஃபைண்டிங்க்ஸ் என அழைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications