தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில் தங்கத்தை முக்கிய சேமிப்பாகக் கருதுவோர், தங்க நகைகளை வாங்குவது மூலம் செய்கூலி, சேதாரம் குறைவதை உணர்ந்து சமீபத்தில் அதிகப்படியாகத் தங்க நாணயங்களாக வாங்கத் துவங்கியுள்ளனர்.
ஆனால் தற்போது தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருக்கும் காரணத்தால் பல நகைக்கடைகளில் தங்க நாணயங்களை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளனர். கடைகளில் வாடிக்கையாளர்கள் சென்று கேட்டாலும் தங்க நாணயங்களை நகைக்கடை அமைப்புகள் விற்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நகைக் கடைகளில் தங்க நாணயங்கள் விற்பது நிறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுவது, அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கலந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் உள்ள நிலையில் நகைக் கடைக்காரர்கள் தங்களுடைய நகைகளை (பழைய விலையில் வாங்கிய தங்கத்தில் செய்யப்பட்ட நகைகள்) விற்பனை செய்வது மூலம் அதிக லாபம் பெற வேண்டும் என்பதற்காகத் தங்க நாணயங்களை விற்பனை செய்வதை நிறுத்தி வைத்திருக்கலாம்.
மேலும் தங்கத்தை நகையாக விற்பனை செய்வதன் மூலம் செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் கீழ் அதிகப்படியான லாபத்தை நகைக் கடைக்காரர்கள் பெற முடியும். இதேபோல் தங்க நாணயத்தில் அச்சு கூலியாக 50 ரூபாயோ 100 ரூபாயையோ தான் பெற முடியும். எனவே தங்க நாணயங்களை வங்க விரும்பினால் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் தங்க நாணயம் விற்கப்படுகிறது, இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 66,700 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் உயர்ந்து 72,760 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து 53,360 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 88000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 1220 ரூபாய் உயர்ந்து 26,060 ரூபாயாக உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் சேமிப்பு பழக்கத்தில் தங்கம் முக்கிய இடத்தை கொண்டு இருக்கும் வேளையில் தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள விலை உயர்வு சாமானிய நடுத்தர மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் செல்ல வேண்டும்.
குறிப்பாக அரசு ஊழியர்கள், மாத சம்பளக்காரர்கள் என மாதம் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்க வேண்டும் என்ற வழக்கத்தைக் கொண்டுள்ளோர், விவசாயிகள் அறுவடை பணத்தைக் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்வோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்கம் விலை உயர்வு பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது.
தங்கத்திற்கு மாறாகத் தங்கம் பத்திரம் வந்தாலும், சாமானிய மக்களுக்கு எளிதாகப் பணமாக்கக்கூடிய சொத்தாகத் தங்கம் உள்ளது. அவசர மருத்துவச் செலவுகள் துவங்கி, பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்துவது வரையில் தங்கம் முக்கிய ஆதாரமாக உள்ளது.
சாமானிய மக்கள் பணத்தைப் பணமாக வைத்தால் கட்டாயம் சேமிக்க முடியாத நிலையில், தங்கமாக முதலீடு செய்தால் கட்டாயம் இதன் மதிப்பு உயரும் என்ற நம்பிக்கை உள்ளது இதனாலேயே தங்கத்தை மக்கள் அதிகம் சார்ந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மக்களின் நிதிநிலை ஸ்திரமாக இருக்க இத்தகைய முதலீட்டுப் பழக்கமும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?



Click it and Unblock the Notifications