மக்களுக்கு தங்கத்தை பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி விளக்க வேண்டும் என்பதில்லை. ஏனெனில் இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் தங்கத்திற்கு தனி இடம் உண்டு. தங்கம் மங்களகரமான ஒன்றாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. சுப நிகழ்ச்சிகளின் போது தங்கம் வாங்குவது லட்சுமி தேவியின் பூரண அருளைப் பெற்று தரும் என்பது நம்பிக்கை. சிலர் தங்கத்தை பாதுகாப்பான முதலீடு என்றும் கருதுகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தைப் போட்டுவிட்டு லாபம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று ரிஸ்க் எடுக்க மனம் இல்லாதவர்களும் தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். தங்கம் வாங்கும் போது பல்வேறு கேள்விகள் மனதில் எழுகிறது.

தங்க நாணயம் நல்லதா? அல்லது தங்க நகைகள் நல்லதா? எந்த முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும்? என மக்கள் குழம்புகின்றனர். அதற்கான விடையை தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
தங்க நாணயம் Vs தங்க நகைகள்: தங்க நாணயங்கள் மற்றும் தங்க நகைகளை மக்கள் தங்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வாங்குகின்றனர். தங்க நாணயங்களைப் பொறுத்தவரையில் சேமிப்பிற்காக வாங்குகின்றனர். கையில் சிறிது பணம் சேர்ந்தால் ஒவ்வொரு கிராமமாக காயின் வாங்கி வைத்துவிட்டு, அதன் பிறகு தேவைப்படும் நேரங்களில் அவற்றை விற்று பணமாக்கலாம்.
அப்படி இல்லை என்றாலும் கொடுத்துவிட்டு நகைகளாக செய்து கொள்ளலாம். அதே சமயம் தங்க நகைகள் அழகுக்காகவும் ஆபரணமாகப் பயன்படுத்தவும் மக்களால் வாங்கப்படுகிறது. தங்க நகைகளுக்கு கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. அதுவும் இந்தியாவில் வசிக்கும் பெண்களுக்கு தங்க நகைகள் மீது அலாதியான பிரியம். இதனால்தான் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தாலும், முன்னணி தங்க நகை நுகர்வோராக இந்தியா இருந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதியன்று தங்கம் விலை அதிகரித்து உச்சத்தை எட்டியது. ஏனெனில் அன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் 10,000-த்தைக் கடந்தது. இதனால் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை எட்டியது. இந்த விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் மீது இன்னும் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. இப்படி சமீப காலமாக விலை உயர்வு இருந்தாலும் தங்கத்தை மக்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி மத்திய வங்கிகளும் தொடர்ந்து தங்கக் கையிருப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் காரணமாகவும் தங்க விலை உயர்ந்து வருகிறது.
தங்க நாணயங்களைப் பொறுத்தவரையில் இவை முதலீட்டிற்கு சிறந்தத் தேர்வாக இருக்கும். நீங்கள் தங்கக் காயின்களை வாங்கி வைத்திருந்தால், தேவைப்படும்போது அவற்றை விற்றாலும் நீங்கள் அன்றைய தினம் எவ்வளவு விலைக்கு தங்கம் விற்பனையாகிறதோ? அதே விலைக்கு கடைக்காரர் உங்களிடம் வாங்கிக் கொள்வார். ஆனால் இது நீங்கள் வாங்கிய தங்கத்தின் கேரட் மதிப்பையும் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தங்க நகைகளை வாங்கினால் அவற்றை நீங்கள் உணர்வுப்பூர்வமாக அணிந்து கொள்ளலாம். கலாச்சாரம் மதிப்பை நிலை நிறுத்தலாம். ஆனால் அவற்றை விற்பனை செய்யும் போது விலை சற்று குறையும். நகை வாங்கும் போது மேக்கிங் சார்ஜஸ் போன்றவற்றையெல்லாம் செலுத்தி தான் வாங்க வேண்டும். அப்படி இருக்கையில் அவற்றை விற்பனை செய்யும் போது இந்தக் கட்டணங்கள் எல்லாம் கழிக்கப்பட்டு தான் மறு விற்பனை செய்ய முடியும்.
அனால் கலாச்சார முக்கியத்துவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது தங்க நகைகள் சிறந்த தேர்வு.
தங்க நாணயங்கள் மற்றும் நகைகளின் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்: தங்க நாணயங்களை எளிதாக பணமாக்க முடியும். ஆனால் நகைகளை விற்பனை செய்வதற்கான செயல்முறை சற்று நேரம் எடுக்கும் ஒன்றாக இருக்கலாம். தங்க நாணயங்கள் பெரும்பாலும் 24 கேரட் தங்கத்தால் செய்யப்படுபவை. 22 கேரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தூய தங்கத்தை கொண்டிருக்கும். இவற்றை வளைத்து முறுக்கி நகைகள் செய்யலாம். ஆனால் 24 கேரட் தங்கம் என்பது 99 சதவீதம் தூய தங்கத்தைக் கொண்டது.
தங்கம் மிருதுவாக இருப்பதனால் அவற்றை வளைத்து முறுக்கி நகைகள் செய்ய முடியாது. எனவே 24 கேரட் தங்கத்தில் தங்க காயின்களை வாங்கலாம். எனவே தங்க நகைகள் மற்றும் தங்கக் காயின்களை வாங்க முடிவெடுத்திருந்தால், அதன் தூய்மை, மறுவிற்பனை மதிப்பு உங்களுடைய நிதி நலனுக்கு ஏற்ற தேர்வா? என்பதை எல்லாம் கவனித்து முதலீடு செய்ய வேண்டும். நகைகள் அழகுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும் வாங்கப்படலாம். அதுவே முதலீடாக இருந்தால் தங்க நாணயங்கள் மற்றும் தங்க பார்களை வாங்குவது லாபத்தை அதிகரிக்கும்
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications