சமீப காலமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது அதுவும் இந்தியா தான் தங்க நகை நுகர்வோரில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. நம் நாட்டில் இருக்கும் பல குடும்பங்கள் மாத மாதம் 1 கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்து வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் பல ஆண்டுகளாக தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. அவசர காலங்கள் ஏற்படும் போது இதை வைத்து பணம் பெறலாம் என்பதால் தான் பலர் எந்தவித யோசனையுமின்றி தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
அப்படி தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஏற்படும் குழப்பம் என்னவென்றால்.. தங்க நகை வாங்குவதா? அல்லது தங்கக் காயின்கள் வாங்குவதா? என்பதுதான். நீங்களும் இதே போல குழம்பி கொண்டிருந்தால்.. உங்களுக்கு தான் இந்தப் பதிவு.

பணவீக்கத்திற்கு எதிராக ஏதேனும் ஒரு சேமிப்பை வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். அதற்கு ஏதுவாக தங்கம் கடந்து வந்த பாதையைப் பார்த்தோமானால் முன்பு இருந்ததை விட அதிக ரிட்டன்ஸை வழங்கியுள்ளது. 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 22-ஆம் தேதி நிலவரப்படி இதுவரை இல்லாத வகையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.
இதே தங்க விலையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் யோசித்துப் பாருங்கள். அப்போது 10 கிராம் தங்கம் 26,343 ரூபாயாக இருந்தது. இதை வைத்து பார்த்தால் தங்கம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
தங்க காயின்கள் Vs தங்க நகைகள்: தங்க காயின்களும், தங்க நகைகளும் வெவ்வேறு காரணங்களுக்காக வாங்கப்படுகின்றன. தங்க நாணயங்களை பொறுத்தவரையில் முக்கியமாக இதை ஒரு முதலீடாக கருதி தான் பலர் வாங்குகின்றனர். மாத சம்பளம் பெறுபவர்கள் தங்கள் கையில் உள்ள பணத்தை ஏதேனும் ஒரு முதலீட்டில் செலுத்தியாக வேண்டுமென்று காயின் வாங்குகின்றனர். அதே நேரத்தில் அழகுக்காகவும், கலாச்சார முக்கியத்திற்காகவும் சிலர் நகைகள் வாங்குகின்றனர்.
நன்மைகள் மற்றும் தீமைகள்: தங்க நாணயங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்குமா? என்றால் நகைகளோடு ஒப்பிடுகையில் தங்க நாணயங்கள், ரூபாய் நாணயங்களை போலத்தான் காட்சியளிக்கும். எனவே இவை முதலீட்டிற்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் தங்கத்தை ஆபரணமாக அணிய வேண்டும் என்று நினைப்பவர்கள் நகைகளை வாங்கிக் கொள்ளலாம். நகைகளாக வாங்கும் போது அவற்றின் மறு விற்பனை மதிப்பு குறையும்.
அதுவே தங்க காயின்களாக வாங்கினால் சர்ச்சார்ஜ் மற்றும் டையிங் சார்ஜ் போன்ற கட்டணங்கள் விதிக்கப்படும். ஆனால் நீங்கள் அதை மறு விற்பனை செய்யும் போது அன்றைய நாளில் தங்கம் விலை எவ்வளவோ அந்த விலையைக் கொடுத்து கடைக்காரர் வாங்கிக் கொள்வார். தங்க நகைகளை பொருத்தவரையில் அப்படி செய்ய முடியாது. அதன் மதிப்பு மறு விற்பனையின் போது குறையலாம்.
முதலீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது நகைகளுடன் ஒப்பிடுகையில் நாணயங்களை வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் நாணயங்கள் 24 கேரட் தங்கத்திலும் செய்யப்படும். 24 கேரட் தங்கம் என்பது 99.9% தூய தங்கத்தை கொண்ட ஒன்று. ஆனால் நகைகளாக வாங்கினால் அவற்றின் மதிப்பு குறையலாம். ஏனெனில் நகைகள் 22 கேரட் தங்கத்தில் செய்யப்படும். இதில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும். மற்ற சதவீதம் வெள்ளி, காப்பர் போன்ற இதர உலோகங்கள் கலந்து தான் நகைகள் செய்யப்படும். அதிக மறுவிற்பனை மதிப்பு இருக்க வேண்டும் என்றால், அதற்கு கோல்ட் காயின்களில் முதலீடு செய்யலாம். அதுவே உங்களுக்கு நகைகள் தான் பிடிக்கும் என்றால், நகைகளில் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications