சென்னையில் இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்றைய தினம் சரிந்திருக்கிறது. வெள்ளியின் விலையும் இன்றைய தினம் குறைந்து இருப்பது சாமானிய மக்களுக்கு பெரிய ஆறுதலை தந்திருக்கிறது.
சென்னையில் திங்கட்கிழமை தொடங்கிய இன்று வரையிலான நான்கு வர்த்தக நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை இரண்டு நாட்கள் உயர்ந்து , இரண்டு நாட்கள் சரிவை சந்தித்திருக்கிறது. திங்கட்கிழமை என்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 100 ரூபாய் விலை குறைந்து 14,950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை அன்று 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 15,050 ரூபாய்க்கு விற்பனையானது.

அதே வேளையில் புதன்கிழமை அன்று ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் விலை உயர்ந்து 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் முழுவதுமே இறங்குமுகமாக காணப்பட்ட தங்கம் இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் உயர்ந்தது பொதுமக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. மீண்டும் தங்கம் விலை பல மடங்கு உயர்ந்து விடுமோ என அனைவரும் அச்சமடைந்தனர்.
இந்த சூழலில் தான் இன்றைய தினம் தடாலடியாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 150 ரூபாய் விலை குறைந்து 14, 970 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது மீண்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் 1, 20, 960 ரூபாய்க்கு விற்பனையானது, இன்று 1200 ரூபாய் விலை குறைந்து 1,19,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1500 ரூபாய் விலை குறைந்து 1, 49,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் 164 ரூபாய் விலை குறைந்து 16,331 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1312 ரூபாய் விலை குறைந்து 1,30,648 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு 250 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் 12,700 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் விலை குறைந்து 1,01,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை தொடர்ந்து இன்றைய தினம் வெள்ளியின் விலையும் குறைந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கும் ஒரு கிலோவுக்கு 10,000 ரூபாய் குறைந்து 2,90,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் ஸ்பாட் கோல்டு விலை ஒரு அவுன்ஸ் விலை குறைந்து 5,152 டாலர்களுக்கு விற்பனையாகிறது, வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 84 டாலர்கள் என விலை சரிந்துள்ளது. சர்வதேச சந்தையிலும் நிலவும் இந்த விலை மாற்றமே இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications

