தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை நன்னாளில் தங்கம் விலை பெரிய அளவில் சரிவடைந்து மக்களுக்கு சர்ப்பிரைஸ் தந்துள்ளது. இதனால் தங்க நகைபிரியர்கள் , நன்னாளில் தங்கம் வாங்க காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 14,570 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே இன்று 270 ரூபாய் விலை குறைந்துள்ளது. அதாவது இன்று ஒரு கிராம் தங்கம் 14,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று 1,16,560 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் 2160 ரூபாய் விலை குறைந்து 1,14,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பின் தங்கம் விலை ஒரே நாளில் 2000 ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது.

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலையும் பெருமளவில் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் நேற்று 15894 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராம் விலை 294 ரூபாய் விலை சரிந்து 15600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 127,152 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் இன்று 124,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் போர் தொடங்கியது முதலே இந்தியாவில் தங்கம் விலை குறைந்து வருகிறது.அதுவும் தொடர்ச்சியாக 7 நாட்களாக தங்கம் விலை இறங்குமுகமாக இருப்பது இதுவே முதன்முறையாகும். சென்னையில் 7 நாட்களாக தங்கம் விலை குறைந்த வண்ணமே இருக்கிறது. சென்னையில் மார்ச் 12-ஆம் தேதி தொடங்கி இன்று வரையிலான ஏழு வர்த்தக நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 820 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது இந்த ஏழு நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 6,560 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது.
தங்கத்தை அடுத்து சென்னையில் இன்றைய தினம் வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் விலை குறைந்து 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் விலை குறைந்து 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி இன்று வரையிலான எட்டு வர்த்தக நாட்களில் ஒரு நாளைத் தவிர மற்ற ஏழு நாட்களிலும் சரிவிலே தான் இருக்கிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 265 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கும் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி



Click it and Unblock the Notifications