சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் தங்கம் விலை சர்ரென சரிந்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதியான நேற்று காலை லேசாக விலை உயர்ந்த தங்கம் மாலை விலை குறைந்து, இன்று தடாலடியாக விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சரிந்துள்ளது. ஒரு கிராமுக்கு 240 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,935 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,920 ரூபாய் விலை சரிவடைந்து, 1,11,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக விலை குறைந்திருப்பதால் நகை பிரியர்கள் கொண்டாட்டட்தில் உள்ளனர். ஏனெனில் ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை வேகமாக உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் விலை கூடியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலையில் மாற்றத்தை காண முடிகிறது.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 15,202 ரூபாய்க்கும் 10 கிராம் 1,52,020 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,720 ரூபாய்க்கும் ஒரு சவரன் 93,760 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.50 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாயும் கிலோவுக்கு 10,000 ரூபாயும் விலை குறைந்தது.
உலக சந்தையில் தங்கம் விலை குறைந்ததே தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையிலும் தங்கம் விலை குறைய காரணமாகும். உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 4,300 டாலர்களாக உள்ளது, ஒரு அவுன்ஸ் வெள்ளி 63 டாலர்களாக உள்ளது. கிட்டதட்ட 1%க்கு மேல் விலை சரிந்துள்ளது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,49,750 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் 3 வாரங்களில் தங்கம் விலை வேகமாக உயர்ந்தது., இதனால் லாபத்தை பதிவு செய்யும் நோக்கத்தில் பலரும் தங்கத்தை விற்க தொடங்கியதால் விலை குறைந்துள்ளது. இது ஒரு தற்காலிக விலை திருத்தம் தான் என்றும், இந்த ஆண்டு இறுதியில் விலை மீண்டும் உச்சத்தை எட்டும் என்றும் தரகு நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

