தங்கம் விலை 1 லட்சம் வந்தாலும் சரி, 2 லட்சம் வரை உயர்ந்தாலும் சரி மக்கள் தங்கம் வாங்குவதை மட்டும் நிறுத்த மாட்டாங்க போல. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையிலும், இந்தியா மட்டும் அல்லாமல் உலகளாவில் தங்கம் வாங்குவது அதிகரித்து, தங்கத்தின் தேவை புதிய உச்சத்தை எட்டியது என்று மோதிலால் ஓஸ்வால் பிரைவேட் வெல்த் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய ரீடைல் சந்தையில் மே மாதம் மட்டும் தங்கம் விலை சுமார் 1.65 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இம்மாத துவக்கத்தில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 8775 ரூபாயாக துவங்கிய நிலையில் மே 8ஆம் தேதி 9130 ரூபாய் என்ற உச்ச விலையை எட்டியது. இன்று ரீடைல் சந்தையில் 8920 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

உலகளவில் நிலவிய புவிசார் பதற்றங்கள், வர்த்தகப் போர்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்க விலையை புதிய உச்சத்திற்கு உயர்த்தியுள்ளன. தங்தத்தை மக்கள் நேரடியாக வாங்குவது குறைந்து தற்போது தங்க பரிவர்த்தனை நிதியங்கள் (ETFs) மூலம் அதிகமாக வாங்க துவங்கியுள்ளனர்.
மேலும் ETF மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்க கொள்முதல் மூலம் தங்கத்திற்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவில் தங்க நகை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து இதன் தேவை 170% உயர்ந்து 552 டன்களை எட்டியது, இது 2022 ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு பிந்தைய காலத்தில் ஏற்பட்ட தடாலடி உயர்வை போலவே உள்ளது. ஐரோப்பா, ஆசியா மற்றும் இந்தியாவில் தங்க ETF மீதான முதலீடுகள் அதிகரித்தது தான் 170% உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
முதல் காலாண்டில் சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் மற்றும் நாணய மதிப்பு மாறுபாடுகளால் முதலீட்டாளர்கள் தங்கத்தை முக்கிய முதலீட்டு கருவியாக பார்த்த காரணத்தால் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.
மேலும் வளர்ந்து வரும் நாடுகளின் மத்திய வங்கிகள் அதாவது ரிசர்வ் வங்கிகள் 244 டன் தங்கத்தை இருப்புக்கு சேர்த்துள்ளது. இந்த 170 சதவீத உயர்வில் மத்திய வங்கிகள் பெரும் பங்கீட்டை கொண்டுள்ளது.
இதுவரை பார்த்தது அனைத்தும் முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட மாற்றம், ரீடைல் சந்தையில் பார்க்கும் போது தங்க விலை உயர்வால் இந்தியாவில் நகை விற்பனை முதல் 3 மாதத்தில் 25% குறைத்து, 2020 மூன்றாம் காலாண்டுக்குப் பிந்தைய மிகக் குறைந்த அளவை எட்டியது. தங்கம் விலை உயர்வு மக்களின் தங்கம் வாங்கும் திறனை பாதித்து. இந்தியாவில், முதலீட்டு தேவை ETF-கள் மூலம் உயர்ந்தாலும், நகைத் தேவை விலை உயர்வால் பாதிக்கப்பட்டது.
உலகளாவிய தங்க விநியோகம் 2025 முதல் காலாண்டில் 1,206 டன்களை எட்டியது, இது முந்தைய ஆண்டை விட 1% அதிகரித்துள்ளது., 2016க்கு பிந்தைய மிக உயர்ந்த முதல் காலாண்டு விநியோகமாகும். விநியோக அளவு சிறிதாக உயர்ந்தாலும், தங்க விலைகளின் பெரும் உயர்வு சந்தை மதிப்பை 40% உயர்த்தியது. இது, தங்க சுரங்க மற்றும் மறுசுழற்சி துறைகளின் நெகிழ்ச்சியையும், உயர்ந்த தேவையை பூர்த்தி செய்யும் திறனையும் வெளிப்படுத்துகிறது.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications