சென்னை: மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதி மீதான வரியைக் குறைத்ததால், ரீடைல் சந்தையில் இதன் விலை பெரிய அளவில் குறைந்திருப்பதால், வரும் பண்டிகை சீசனில் தங்கத்திற்கான டிமாண்ட் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று வர்த்தக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மக்கள் தங்கத்தைப் பல விஷயங்களுக்காக வாங்கினாலும், முக்கியமான சில காலகட்டத்தில் தங்கம் வாங்குவதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாகத் தென்னிந்தியாவில் அறுவடைக் காலத்தில் தங்கம் அதிகம் விற்கப்படும், அதை விட்டால் திருமண சீசனின் போது அதிகம் விற்கப்படும்.

ஆனால் வட இந்தியாவில் தங்கம் வாங்குவதில் சில வித்தியாசம் இருக்கிறது, திருமண சிசனில் வழக்கம் போல் அதிக தங்கம் விற்கப்பட்டாலும், தீபாவளி, அட்சய திருதியை, தசரா போன்ற பிற முக்கியமான பண்டிகை காலத்தில் தங்கம் அதிகம் வாங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க நுகர்வோராக இருக்கும் இந்தியாவில் பல மொழி, பல கலாச்சாரம் கொண்டிருக்கும் காரணத்தால் வருடம் முழுவதும் தங்கத்திற்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் தங்கம் இறக்குமதி மீதான வரி குறைப்பு எல்லாம் மக்களுக்கு ஜாக்பாட் போன்றது. ஆனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டு வருகிறது, கடந்த வாரம் வரலாற்று உச்சத்தை தொட்டது. ஆனால் தங்க இறக்குமதிக்கான தேவை அதிகரிப்பது இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை அதிகரித்து, ரூபாயின் மதிப்பை குறைக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் தாக்கம் குறித்து இன்னும் சந்தை நிலவரம் தெரியவில்லை.
மத்திய அரசு முழு பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் இறக்குமதி வரியை ஜூலை மாதம் 15% இலிருந்து 6% ஆக இந்தியா குறைத்தது. இது முறைகேடாக இந்தியாவுக்குள் கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்தையும், போலியாக கணக்குக்காட்டி துபாய் போன்ற நகரங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கமாக கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்நிலையில் வரும் பண்டிகை சீசனில் தங்கத்தின் தேவை மிகவும் வலுவாக இருக்கும் என்று வோல்டு கோல்டு கவுன்சில் அமைப்பின் இந்திய பணிகளை நிர்வாகம் செய்யும் சச்சின் ஜெயின் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 66,950 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 73,040 ரூபாயாக உள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 53,560 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு வெறும் 100 ரூபாய் குறைந்து 92,900 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 130 ரூபாய் குறைந்து 20,648 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications